Thursday 1 December 2011

ஏறக்குறைய ஒரே கான்செப்ட்டில் நிறைய கொலைகள் - பகுதி ஒன்று. : Case 39 - 2009


வாசகர்கள் அனைவரும் தயவு செய்து மன்னிக்கவும்.சில வேலை காரணமாக பதிவுகளை   எழுத நேரம் கிடைக்கவில்லை..அதற்காக இன்னொரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இதோ இந்த மாதத்தின் முதல் பதிவாக இன்றைய பார்வை..        
==========================================
ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பு பார்த்த படங்கள் இவை...

Film : Case 39    Year : 2009
Country : America    Rating : R (Please..View)
Director : Christian Alvart         Writers : Ray Wright
Stars : Renée Zellweger, Ian McShane and Jodelle Ferland
.Awards : 1 nomination <<< See more awards >>>


 Christian Alvart என்பவரின் இயக்கத்தில் 2009 - ஆண்டு வெளிவந்த படம்.Renée Zellweger, Ian McShane and Jodelle Ferland ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க, Ray Wright என்பவர் திரைக்கதை எழுதி இருக்கிறார்.

திரைப்படத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்ய :
++++++++++++++++++
++++++++++++++++++++
============================================

.வில்லங்கத்த வீட்டுல வந்து வைக்க கூடாதுன்னு சொல்லுரது இந்த படங்களோட கதைகளுக்கு சரியாக பொருந்துகிறது..

   ஹீரோயினும் சமூக சேவகருமான எமிலி ஜென்கின்ஸ் (அதாங்க..Renée Zellweger) சில தவிர்க்க முடியாத (ரொம்ப சீரியஷான) காரணங்களால (அது சஸ்பென்ஸ்) 10 வயது சிறுமியான லிலித் சல்லிவனை (Jodelle Ferland) கூட்டிட்டு வராங்க..எமிலியை பற்றி சொல்லனும்னா அவங்களுக்குன்னு சொந்தம் யாரும் இல்ல.அதனால லிலித்தை கவனமாகவும் பாசமாகவும் பார்த்துக்கொள்கிறார்..இப்படியே சில நாட்கள் கழிய சேட்ட அதான் பிரச்சன ஆரம்பிக்குது..லிலித்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் செயல்களிலும் மாற்றங்களை காண ஆரம்பிக்கிறாங்க எமிலி...அதுக்கப்புறம் சும்மா விடுவாரா நம்ம டைரக்டரு வரிசையா கொண்டு வராரு பாருங்க ஒவ்வொரு ஸீனா..யெப்பா.தாங்குல..அப்படின்னு சொல்லும் அளவுக்கு..
==============================================

படத்துல ஹீரோயினா நடிச்சி இருக்கிறவங்க Renée Zellweger.வரை பலருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்புண்டு..Cold Mountain (2003) என்ற திரைப்படத்திற்காக ஆஸ்கர் வென்றவர்...ன்.எதனால என்று ஞாபகம் இல்ல, ஒரு சீன்ல துண்ட கானும் துனிய காணும்னு வீட்ட விட்டு மழையில ஓடுவாரு பாருங்க..அத நினைச்சி நிறையவே சிரிச்சிருக்கேன் (படம் பார்த்து ரொம்ப நாளா ஆகுது)..மற்றபடி இந்த படத்திலும் கதைக்கு தேவையான கச்சிதமான நல்லதொரு நடிப்பை அழகர வெளிபடுத்தியுள்ளார்.இவரும் டோம் குரூஸும் நடித்த Jerry Maguire (1996) என்ற படத்தை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அதை படிக்க.
================
  எனக்கென்னவோ படத்துல ரொம்ப பிடிச்சது Silent Hill என்ற இன்னொரு ஹாரர் படத்துல நடிச்ச Jodelle Ferland..ரொம்ப நலாவே நடிசிருக்காங்க.ஆனா இப்பதான் வயசு 17...
==================
படத்தில் ஒவ்வொரு காட்சியும் நன்றாக இருந்தாலும் கிளைமக்ஸ் காட்சிகள் மட்டும் எனக்கு பெரியளவில் திருப்திக் கொடுக்கவில்லை..அதிகமாக கதையின் மீது நம்பிக்கை வைத்திருந்ததுக்கூட அதுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.என்ன இருந்தாலும் டைரக்டரோட முடிவு, மன்னிச்சு விட்டுரலாம்..பொழச்சிட்டு போகட்டும் ..ஹீ....ஹீ..
====================

இது ஒரு ஆர் ரேட்டிங் பெற்ற படம், கொஞ்சம் வன்முறையும் கொலை காட்சிகளும் இருந்ந்தாலும் எல்லாமே கதைக்கு தேவையானதே..மற்றபடி எல்லாரும் பார்க்க கூடிய படம்தான் இது..எதற்கும் இங்கு சென்றுவிட்டு படம் பார்க்கவும்.
=====================
படத்தில் சில கொலை நிகழும் காட்சிகள் யாவும் திகிலூட்டும் வகையிலேயே எடுக்கபட்டிருக்கும்..மேலும் உண்மையாகவே இந்த சிறுமி யாரென்று தெரிந்தப் பிறகு ஹீரோயின் நடந்துக்கொள்ளும் விதங்கள் எல்லாம் ரொம்ப (சாரி..) கொஞ்சமாவது நன்றாக இருக்கும்.
====================
படத்தோட இயக்குனரான Christian Alvart, இவரும் அதிகமாக ஹாரர் மற்றும் திரில்லர் படங்களை எடுத்து வருபவர்..(யெப்பா..ஆ எத்தன பேரு கிளம்பிருக்காங்கனு தெரில)..அதில சில படங்கள் மூலம் நல்ல பெயரும் எடுத்தவர்..ஜெர்மன் நாட்டில் பிறந்த இயக்குனர் இவரு..
=======================

  ......நல்ல படம்னு சொல்லிகிட்டு விமர்சன ரீதியிலும் வசூலிலும் பெரிசா ஒன்னும் வராட்டாலும் படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. .வழக்கமான ஹாலிவுட் போர்முலாவில் படம் எடுக்கபட்டிருந்தாலும் நிறையவே சஸ்ப்பெனையும் விறு விறுப்பான காட்சிகளாலும் படத்தை அலங்கரித்துள்ளனர் படக்குழுவினர்கள்..அதுக்காகவே இவர்களுக்கு ஒரு கும்பிடு போட வேண்டும்..இதோ போட்டுட்டேளேன்.. 

பின்குறிப்பு : இது போன்ற கதையம்சத்தை கொண்டு நிறைய படங்கள் வந்திருந்தாலும், இதே மாதிரியான கதையைக்கொண்டு 2009 - ஆண்டு வந்த ஒர்ப்பன் படத்தை, இந்த பகுதியின் தொடர்ச்சியாக அடுத்த பகுதியில் ஒரு பார்வை பார்க்கலாம்..பகுதி இரண்டு..

My Rating : 6.6/10 : A Time Passing Film..

============================================================== 
  கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

5 comments:

  1. விமர்சனம் கலக்கல்.
    படம் பாதி பார்த்துள்ளேன், உங்கள் இந்த பதிவு பார்த்தவுடன் தான் ஞாபகம் வந்தது.....
    உங்களது அடுத்த விமர்சனம் ஒர்ப்ஹன் திரைப்படத்தை எதிர்பார்க்கிறேன். எனக்கு கண்டிப்பாக தெரியும் உங்கள் விமர்சனம் நான் எழுதியதை விட கண்டிப்பாக சிறந்ததாக இருக்கும் என்று.

    ReplyDelete
  2. Arun J Prakash said...
    << விமர்சனம் கலக்கல்.
    படம் பாதி பார்த்துள்ளேன், உங்கள் இந்த பதிவு பார்த்தவுடன் தான் ஞாபகம் வந்தது.....
    உங்களது அடுத்த விமர்சனம் ஒர்ப்ஹன் திரைப்படத்தை எதிர்பார்க்கிறேன். எனக்கு கண்டிப்பாக தெரியும் உங்கள் விமர்சனம் நான் எழுதியதை விட கண்டிப்பாக சிறந்ததாக இருக்கும் என்று.>>

    உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..படத்தை முழுதாக பாருங்கள்..பிடிக்கக்கூடும்.ஆனால், ஒர்ஃபன் அளவுக்கு நல்ல படமா என்பது சந்தேகமே.
    உண்மையாகவே தங்களது ஒர்ப்பன் பட விமர்சனம் சிறப்பான ரகம்.படத்தின் கதையை நீங்கள் சொன்ன விதமும் நடையும் அருமை..முக்கியமாக என்னுடையதை விட..விரைவில் பதிவை வெளியிடுகிறேன்.மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete
  3. பாஸ்,
    கொஞ்ச நாள் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை...இப்போ தான் வர முடிந்தது...
    இந்த விமர்சனம் படிச்சேன்.... வழக்கம் போல ரொம்ப நல்லா கதையை சொல்லாம எழுதி இருக்கேங்க...படம் பார்க்க வில்லை...டவுன்லோட் போட்டாச்சு..
    எனக்கு பிடித்த த்ரில்லர்னா அது Hannibal Lecter படங்கள் தான்...எல்லாமே கிளாசிக்கல்..

    ReplyDelete
  4. ராஜ் said...
    <<< பாஸ்,
    கொஞ்ச நாள் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை...இப்போ தான் வர முடிந்தது...
    இந்த விமர்சனம் படிச்சேன்.... வழக்கம் போல ரொம்ப நல்லா கதையை சொல்லாம எழுதி இருக்கேங்க...படம் பார்க்க வில்லை...டவுன்லோட் போட்டாச்சு..>>>

    உங்களது வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.ஹாரர் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்தான் இது.
    ஆனால் அனைவரையுமே கவரக்கூடிய படமா என்பது சந்தேகம்தான்.

    ReplyDelete
  5. <<>>

    நண்பரே, நான் ஏற்கனவே Hannibal Lecter படங்களை பற்றி கேள்விபட்டுள்ளேன்..ஆனால் பார்த்தது Silence Of The lambs என்ற படத்தைதான்.ரொம்ப பிடித்திருந்தது.மற்ற படங்களை பார்க்க இன்னும் வாய்ப்பு கிட்டவில்லை.முதலாவது மறந்துவிட்டேன் என்று சொல்லலாம்..ஞாபகபடுத்தியதற்க்கு நன்றிகள் பல.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...