Film : Jerry Maguire Year : 1996
Country : America Rating : R
Director : Cameron Crowe Writers : Cameron Crowe
Stars : Tom Cruise, Cuba Gooding Jr. and Renée Zellweger
Awards : Won Oscar. Another 22 wins & 18 nominations See more awards
=================================
கொஞ்சம் நில்லுங்க.......... இது ஒரு ஆர் (R) ரேட்டிங்க் பெற்ற திரைப்படம் என்பதை முன்னமே தெரிவித்துக்கொள்கிறேன் (ஒரு சில காட்சிகளும் (ஒரு இரண்டு...மூன்று) ஒரு சில வசனங்களும்).திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பு காரணத்தை அறிந்துக்கொள்ளும் படி தயவு செய்துக் கேட்டுக்கொள்கிறேன்.இங்கே செல்லவும்.....
====================================
90 - ஆம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு சூப்பரான படம்.1996 -ஆம் ஆண்டு டோம் குரூஸ் நடிப்பில் இயக்குனர் ஜேம்ஸ் புரூக்ஸ் தயாரிப்பில் CAMERON CROWE - இன் இயக்கத்தில் வெளிவந்ததது.ஒரு ஸ்போர்ட்ஸ் ஏஜெண்ட் வாழ்வில் மற்றும் தொழிலில் அவர் சந்திக்கும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் திடீர் தோல்விகளால் ஏற்படும் மனமாற்றங்களையும் அதனை மேற்க்கொள்ள எதிர்க்கொள்ளும் முயற்சிகளையும் இத்திரைப்படம் சித்தரிக்கின்றது.இதனை மிகவும் அருமையாக எடுத்ததற்கே இயக்குனரை பாராட்ட வேண்டும்.
ஜெர்ரி மாக்கையர் என்ற கதாபாத்திரத்திற்கு டோம் குரூஸ் உயிர் கொடுக்க ( கூடவே ஆஸ்கர் பரிந்துரையும்), 72 கிளைண்டுகளில் மிஞ்சும் ஒரே ஒரு கிளைண்டாக கியூபா குட்டிங் நடிக்க (ஆஸ்கரும் வாங்கி விட்டார்) இவர்களுடன் Renée Zellweger, Kelly Preston மற்றும் Jerry O'Connell துணைக் கதாபாத்திரத்தில் அபாரமாக நடித்திருக்கின்றனர்.மொத்தம் ஐந்து ஆஸ்கர் பரிந்துரைகளில் இந்த திரைப்படம் சிறந்த துணை கதாபாத்திரத்திற்காக Cuba Gooding Jr. விருதினை வென்றது குறிப்பிடதக்கதாகும்.
=================================
ஜெர்ரி மாக்கையர் திரைப்படத்தில் என்னை கவர்ந்த சுவாரஸ்யங்கள் :
- இந்த படத்தில் முதன்மையாக குறிப்பிட விரும்புவது டாம் குரூஸ் அவரது நடிப்பும்தான்.ஒவ்வொரு காட்சிகளிலும் அவரது ஸ்டைலும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களும் டையலாக் டெலிவரியும் செம்ம சூப்பராக இருக்கும்.காதலியிடம் குத்தும் வாங்கும் போதும், அலுவலகத்தில் தன்னோடுடன் வரச்சொல்லி அனைவரிடம் கேட்கும் காட்சி, திருமணமான கதாநாயகியின் பையனுடன் உரையாடும் வசனங்களும், கதாநாயகியான Renée Zellweger - யிடம் காதல் கொள்ளும் காட்சிகள் என்று இன்னும் பல காட்சிகளில் பிரமாதமான நடிப்பினை வெளிபடுத்தியுள்ளார்.ஆஸ்கர் விருது பெறாதது பெரிய இழப்பே.
=========================
- இரண்டாவதாக திரைப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமாக Cuba Gooding Jr. நடித்த Rod Tidwell சொல்லலாம்.HARDWIRE படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பை இந்த திரைப்படத்தில்தான் பார்க்கிறேன்.முதல் ஆஸ்கர் நாமினேஷனிலேயே விருது வென்றிருப்பது இன்னொரு சிறப்பாகும்.திரைப்படத்தில் துரு துருவென பேசும் காட்சிகளிலும், சிறுவனுடன் போனில் உரையாடும் காட்சிகளிலும் மற்றும் இறுதி காட்சிகளில் திடலில் குதிப்பதும் என தனது நடிப்பை அழகர செய்திருக்கிறார்.இவருக்கும் டோம் குரூஸுக்கும் உள்ள நடிப்பை மிக அழகாக இயக்குனர் சொல்லிருக்கிறார்.ஆஸ்கர் கிடைத்த நடிப்பு என்றால் சும்மாவா என்ன ?
===========================
- மேற்ச்சொன்ன இரண்டு நடிகர்களுக்கு அடுத்து திரையில் அதிகபட்சமாக வலம் வருபவர் கதாநாயகியான Renée Zellweger.இவர் Dorothy Boyd என்ற கனவனை இழந்து வாழும் கதாபாத்திரத்தில் ரொம்ப நன்றாகவே நடித்திருக்கின்றார்.இவரது நடிப்பில் சிறிது நாட்களுக்கு முன்பு CASE 39 ஹாரர் படம் பார்க்க வாய்ப்பு கிட்டியது (அதை பற்றிய பதிவு கூடிய விரைவில்).இவரது மகனாக வரும் Jonathan Lipnicki நடிப்பு அருமை.டாம் குரூஸுடன் இவருடைய உரையாடல்கள் அனைத்துமே பிரமாதம்.
===========================
- நடிப்பைத் தாண்டி நம்மை கவருவது திரைக்கதையும் இயக்கமுமே.இந்த இரண்டையுமே இயக்குனரே செய்ய, ஒவ்வொரு காட்சியையும் சிறப்பான முறையில் சுமார் இரண்டு மணி 20 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தை துளிக்கூட பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் விறுப்பாக அமைத்துள்ளார்.அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.திரைப்படத்தின் பலமே திரைக்கதை என்ற நிலையில் காட்சிகள் அனைத்தையும் கவனமாக நகர்த்தியுள்ளது இயக்குனரின் சாமார்த்தியத்தை காட்டுகிறது.வசனங்கள் அத்தனையும் அவ்வளவு ஷார்ப்...மேற்க்கொண்டு அறிவதற்கு திரைப்படத்தை பார்ப்பதைவிட தவிர வேறு வழியில்லை (என்னிடம்).
=====================================
- மேலும், இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஸ்பீர்பெர்க்கின் frequent collaborator - ஆன Janusz Kaminski.Schindler' List, Saving Private Ryan போன்ற திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு இவருடைய திறமையை பற்றி சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்....மேலும் படத்துக்கு ஒளிப்பதிவு எவ்வளவு பலமோ அதற்கு இணையாக இசையை சொல்லலாம்..Nancy Wilson (இயக்குனரின் முன்னாள் மனைவி) அழகாக செய்திருக்கிறார்.
==============================================
- சுமார் 50 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உலமெங்கும் 270 கோடிக்குமேல் வசூலை தந்தது மட்டுமன்றி விமர்சனர்களால் அதிகபட்சமாக நல்ல வரவேற்பு பெற்றது இன்னொரு சிறப்பாகும்.ROTTEN TOMOTOES 85% பிறகு IMDB 7.3 என்றால் சும்மாவா என்ன ?
============================================
- 2008 - ஆண்டு AFI TOP 10 திரைப்படங்களில் இந்த திரைப்படம் ஸ்போர்ட்ஸ் லிஸ்டில் 10 இடத்தில் உள்ளது மேலும் ஒரு சிறப்பாகும்.
========================================
- அதோடு, இத்திரைப்படம் புகழ்பெற்ற விளையாட்டு முகவரான (Sports Agent) Leigh Steinberg அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தூண்டுதலாக கொண்டு எடுக்கபட்டதாகும்...இதனை படத்தின் கிரடிட் கார்டில் பார்க்கலாம்...
======================
இறுதியாக நல்ல படம் பார்க்க நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு விருந்து இந்த படம்....காண மறவாதீர்கள்...
MY RATING : 8/10
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்...மீண்டும் அடுத்த முறை சந்திக்கலாம்...அதுவரை நன்றி..வணக்கம்..
WATCH TRAILER
சகோ பட்டய கிளப்புங்க.. ( உங்க டெம்லெட் கொஞ்சம் மாத்தினால் படிக்க கொங்சம் எளிதாக இருக்கும்னு நினைக்கறேன்.. ) டெம்லெட் மாத்த உதவி ஏதும் தேவை பட்டா மெயில் பன்னுங்க.. mr.rain6@gmail.com
ReplyDeleteMr.Rain :
ReplyDeleteசகோ கருத்துக்கு மிக்க நன்றி..தங்களது வேண்டுக்கோளை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்..உங்கள் கவிதைகள் சிலவற்றை படிக்க வாய்ப்பு கிடைத்தது..அருமையாகவும் இருந்தது..வாழ்த்துக்கள்..
சூப்பர் பாஸ். கொஞ்சம் தமிழ் சினிமாவையும் அலசலாமே...?
ReplyDeleteLoganathan Gobinath said...
ReplyDelete<< சூப்பர் பாஸ். கொஞ்சம் தமிழ் சினிமாவையும் அலசலாமே...? >>
தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ..
வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக தமிழ் படங்களை பற்றி கொஞ்சமாவது எழுதிட முயற்சி செய்கிறேன்.கருத்துக்கு மீண்டும் நன்றிகள் பல.
Anne, Aaranya kaandam nu oru tamil padam paarunga,vimarisanam ezhudhunga..... ennamaa edutthirukkaanga!!!!! Nice posts.....vaazhthukal!
ReplyDeleteகனேஷ் சார், தங்களது வருகைக்கு.நன்றி..கட்டாயம் படம் பார்க்கிறேன்..
Delete