Monday, 24 October 2011

ஹாலிவுட் சினிமா : SALT - 2010 : கவர்ச்சி புயல் ஏஞ்சலினா ஜூலியின் அதிரடி ஆட்டமும்...அடுத்த படமும்

@@ஏறக்குறைய பல வலைப்பூ அண்ணன்களிடமிருந்து அசத்தலான விமர்சனங்கள் வந்து ரசிகர்கள் எல்லாரும் பார்த்து முடித்து..ஏப்பம் விட்ட படமிது @@
======================




Film : Salt  Year : 2010
Country : America  Rating : PG - 13 (parental advised)
Director : Phillip Noyce  Writers : Kurt Wimmer
Stars : Angelina Jolie, Liev Schreiber, Chiwetel Ejiofor, Daniel Olbrychski  
Awards : Nominated For Oscar <<< View >>>

==================================

 பல கோடி ரசிகர்களை கவர்ந்த ஏஞ்சலினா ஜுலி நடித்த படம்..ஸாரோன் ஸ்டோன் நடித்த Sliver(1993), The Saint (1997), Rabbit-Proof Fence (2002), The Bone Collector (1999) போன்ற பல அதிரடி திரில்லர் படங்களை எடுத்த Phillip Noyce இயக்கத்தில் 2010 - ஆம் ஆண்டு Liev Schreiber, Chiwetel Ejiofor, Daniel Olbrychski, August Diehl போன்றவர்களின் துணை நடிப்பில்வந்த படம்.இத்திரைப்படம் சிறந்த சவுண்ட் கலவைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும்.


+++++++++++++++++++++
SALT - 2010 DVD RIP
+++++++++++++++++++++++++

கதைச்சுருக்கம் :

"ஒரு சில காரணங்களால் எவ்லின் சால்ட் என்ற சிஐஏ ஏஜெண்ட் ரஷ்ய நாட்டு உளவாளி என்று  தவறுதலாக குற்றம் சாட்டிட, அமெரிக்க அரசாங்கத்தின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தப்பிபதுதான் கதை.."

SALT - 2010 திரைப்ப்டத்தில் என்னை கவர்ந்த சுவாரஸ்யங்கள் :



  எவ்லின் சால்ட் என்ற கதாபாத்திரத்தில் ஏஞ்சலினா ஜூலி, திரைப்படத்தில் தன்னுடைய கவர்ச்சியான தோற்றத்தையும் அதிரடியான ஆட்டத்தையும் (ஆக்சனையும்) கலந்து ரசிகர்களை கலக்கி இருக்கிறார்..முதல் காட்சியில் சாதுவாக தோன்றுபவர் காட்சிகள் நகர நகர தன்னை கதையோடு உள்வாங்கிக்கொண்டு தேவையான அளவில் நடிப்பை வழங்கி இருக்கிறார்..இதில் சிறப்பு என்னவென்றால்..படத்தில் பல ஸ்டண்ட் காட்சிகளை இவரே செய்ததுதான்...(அப்பிறமென்ன திரையுலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையாச்சே எவ்வளவு... 30 கோடி)
===========

ஒன்றரை மணி நேர படம் போவதே தெரியாத அளவிற்க்கு, ஆரம்பம் முதல் இறுதி காட்சிகள்வரை ஒரே விறு விறுப்புதான்..திரைக்கதை எழுத்தாளரான Kurt Wimmer கண்டிப்பாக பாரட்ட வேண்டாம்..இதுப் போன்ற கதையையும் ஜூலியை போன்ற டோப் ஆக்ட்ரஸை வத்துக்கொண்டு ரசிகர்களை (குறிப்பாக இளைஞர்களை) கவரும் வகையில் ஒவ்வொரு காட்சிகளையும் அழகாகவும் கொஞ்சம் கூட சலிப்புத்தட்டாமல் விறு விறுப்பாக நகர்த்தியுள்ளார்..(குறிப்பு : அழகு என்பது ஆக்சன் காட்சிகளில்)
===================


 எவ்வளவு பெரிய திரைக்கதையும் எழுத்தாளரும் நடிகைகளும் கிடைச்சாலும், கேப்டன் ஒஃப் தெ ஷிப் சரியில்லனா கப்ப தர தட்டிரும் என்பதை புரிந்துக்கொண்டு இயக்குனர் கவனமாக செயல்படுத்தி இருக்கிறார்..இண்டரஸ்திங்கான சண்டை காட்சிகளை வழங்கியதற்க்கு இவரை கண்டிப்பாக பாரட்டலாம்..அதோடு இவர் நிறைய நல்ல படங்களை கொடுத்தவர்..
========================

நடிகர் டாம் குரூஸ்க்காக எழுதப்பட்ட கதை இது..ஒரு சில காரணங்களால் நிறைவேறாமல் போக ஏஞ்சலினாவை நடிக்கவைத்துள்ளனர்..மேலும், இவருக்காக திரைக்கதை மீண்டும் எழுதப்பட்டது குறிப்பிடதக்கதாகும்..
=============================

சுமார் 110 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உலகமெங்கும் சுமார் 300 கோடி வசூல் செய்தது மேலும் ஒரு சிறப்பாகும்..
=====================================


இந்த வருடம் ஜூன் மாதத்தில், படத்தின் Sequel கூடிய சீக்கிரம் திரையை எட்டி பார்க்க வாய்ப்புகள் இருக்கிறது என்று கதாசரியரான Kurt Wimmer அறிவித்துள்ளார்..(இன்னொரு ஏஞ்சலினாவா!!!நல்லாதான் இருக்கும்..)
==============================================

    இறுதியாக, ஆக்சன் விரும்பிகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்களில் இதுவும் ஒன்று..சமீபத்திய ஜேம்ஸ் போண்ட் படங்களுடன் ஒப்பிடும் போது இந்த படம் ரொம்ப நன்றாகவே இருக்கிறது..விறு விறுப்பு குறையாத போரடிக்காத படம்..

MY RATING : 6.5/10   



சிறப்பு செய்தி :

நடிகை ஏஞ்சலினா ஜூலி இயக்குனராக மீண்டும் வரவிருக்கிறார் (ஒரு டோக்குமெண்டரிக்கு பிறகு)..இவர் இயக்கிக் கொண்டிருக்கும் In the Land of Blood and Honey(2011) படம் டிசம்பர் மாதம் வரவிருக்கிறது..இது போஸ்னியா யுத்ததில் நிகழும் காதல் கதையாம்...ஜூலியின் ரசிகர்களிடமிருந்து சிறப்பான ஆதரவும் கிளம்பியுள்ளது.."அந்தமாதிரி' காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்ற நம்பிக்கையில்தானோ என்னமோ.. 


படித்த சில பதிவுகள் :



ஏதேனும் தவறுதலாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்..உங்கள் கருத்துக்களை தயவு செய்து கமெண்ட் பாக்சில் தெரிவிக்கவும்..மீண்டும் அடுத்த முறை சந்திக்கலாம்.அதுவரை

நன்றி..வணக்கம்


3 comments:

  1. நல்ல விமர்சனம், பகிர்வுக்கு நன்றி.
    Angelina Jolie சம்பளம் இதை விட பல மடங்கு அதிகம் என நினைக்கிறன்.

    ReplyDelete
  2. Arun J Prakash
    << நல்ல விமர்சனம், பகிர்வுக்கு நன்றி. Angelina Jolie சம்பளம் இதை விட பல மடங்கு அதிகம் என நினைக்கிறன்.>>>

    மிக்க நன்றி..நண்பரே
    நீங்கள் சொல்வதுப்போல ஜூலியின் சம்பளம் $30 கோடியை தாண்டும் என்றுதான் நம்புகிறேன்..சில நாட்களுக்கு முன் இணையத்தில் ஜூலியின் சம்பளம் $ 30 கோடி என்று படித்ததைதான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.ஒருவேளை இந்த படத்தின் வருமானமாக இருக்கலாம்...எதற்கும் கீழே இணையத்தின் முகவரி இணைத்துள்ளேன் : http://wegotthiscovered.com/movies/top-paid-actresses-hollywood/

    பிறகு, தங்களது Monsters, Inc.- 2001 இப்பொழுதுதான் படித்தேன்..அருமையான பதிவு.பார்க்க ஆவலோடு இருக்கிறேன்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...