Saturday, 29 October 2011

TRUE GRIT - 2010 : பழிவாங்கும் இரட்டை குழல் துப்பாக்கி......

தொடர்ந்து ஆதரவு வழங்கும் வாசக நண்பர்கர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும், உங்களது கருத்துக்களை தயவு செய்து பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்அவைகள் என் எழுத்துகளை பெரிய அளவில் ஊக்கபடுத்தும் என்ற நம்பிக்கையில்...


தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
========================================================================================  

   பொதுவாக ரீமேக்காக எடுக்கபடும் எந்த ஒரு படத்தையும் ஆர்வமாக விரும்பி பார்ப்பது குறைவு.Psycho. The Thing என்று பல படங்கள் ரீமேக்காகி வந்தபோதிலும் ஒரிஜினல் படங்களின் மீது உள்ள பிரியமும் ஆர்வமும் ஒரு போதும் குறைந்ததில்லை..உதாரணத்திற்கு சைக்கோ..கடந்த வாரத்தோடு சேர்த்து இதுவரை ஆறு முறை பார்த்திருக்கிறேன்..ஒரு முறைக்கூட சலிப்பு தட்டவில்லைஆனால்...1998 - ஆம் ஆண்டு ரீமேக் செய்யபட்ட இதே படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை..பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இதுவரை தோன்றியதும் இல்லை..


  இன்றைய சினிமா உலகில் மிக சிறந்த இரட்டை இயக்குனர்களாக கருதப்படும் கோயன் பிரதர்ஸ் இயக்கத்தில் பத்து ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டு 2010 - ஆம் ஆண்டு வெளிவந்த படம் ட்ரு க்ரிட்.தமிழில் இதை "உண்மையான மன உறுதி" என்றுக் கூட மொழிபெயர்க்கலாம்பெயருக்குக்கு சற்றும் குறைவில்லாத வகையில் தைரியமும் பழிவாங்குதலும் திரையில் நிரம்பி வழிகின்றன..

1969 - ஆம் வருடம் ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஜோன் வேய்ன் - க்கு சிறந்த நடிப்புக்க்காக ஆஸ்கர் பெற்று கொடுத்த துரு கிரித் திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த படம்..ஒற்றை கண்னை வைத்துக்கொண்டு துப்பாக்கி பேசும் Retire Marshal - லாக வரும், வேய்னின் அசாதாரமாண நடிப்பை போலவே இந்த படத்தில் ஆஸ்கர் விருது வென்ற JEFF BRIDGES..Rooster Cogburn என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்

..ஒரிஜினலுக்கு கிடைக்காத பேரும் புகழும் இந்த படத்துக்கு கிடைத்தது சற்று ஆச்சரியமே..என்றாலும் அதுக்கு முழுக்க முழுக்க காரணமாக ஓங்கி நிற்பது கோயன் பிரதர்ஸின் திரைக்கதையும் இயக்கமும்தான்..

  இயக்குனர் என்ற துறையை தாண்டி, கோயன் பிரதர்ஸை நான் உலகின் தலைச்சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராகவே..பல வேலைகளில் இருவராகவே கருதுகிறேன்.இவர்களுடைய ஃபார்கோ படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது "மனுஷன் பெரிசா ஏதோ சொல்ல வராண்டா" என்று தோன்றியது..பணம் பத்தும் செய்யும் என்பதற்க்கு ஏற்றாற் போல மனித வாழ்வில் சாதரணமான பணம் செய்யும் லீலைகளை மிக அழகாக தெளிவாக சொல்லிருப்பார்கள்...விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு ஒரு ரைட் சகோதரர்கள் போல சினிமா கண்டுபிடிப்புக்கு ஒரு கோயன் சகோதர்கள் என்பது என்னுடைய தனிபட்ட கருத்து..


 துரூ கிரீட் - Jeff Bridges U.S. மர்ஷலாக Reuben J. "Rooster" Cogburn என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் அப்பாவின் மரணத்துக்கு பழிவாங்க துடிக்கும் பெண்ணாக Hailee Steinfeld - Mattie Ross என்ற ரோலிலும் தந்தையை கொன்ற வில்லனாக Matt Damon - Texas Ranger LaBoeuf என்ற கதாபாத்திரத்திலும் மற்றும் Josh Brolin - Tom Chaney என்ற பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பினை வெளிபடுத்தியுள்ளனர்..ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடதக்கதாகும்.
    
கதைச்சுருக்கம் :

  "The Wicked Flee When None Pursueth"
                - True Grit

  "திரைப்படம் பெண் குரல் NARRATION - இல் காட்சி தொடங்குகிறது.."தன் தந்தை கொலை செய்யபட்டதையும் அதற்கான காரணத்தையும்' அந்த குரல் ஒரு சிறிய விளக்கம் கொடுக்கிறது..அடுத்த காட்சியிலேயே MATTIE ROSS (HAILEE STEINFIELD), அதாவது குரலுக்கு சொந்தக்காரியும் வந்து இறக்குகிறாள்..தொடர்ந்து வரும் காட்சிகள் தந்தையின் மரணத்துக்கு காரணமான துரோகிகளை ரோஸ் பழிவாங்க எடுக்க நடவடிக்கைகளை காட்டுகிறது..இதனை திறம்பட செய்து முடிக்க ஒரு பெரியவரின் உதவியையும் நாடுகிறாள்..அவன் ஒரு குடிகாரன் : பணத்துக்காக எதுவும் செய்யக்கூடியவன்..முதலில் அவளுடைய கோரிக்கையை ஏற்க மறுக்கும் ரூஸ்டரை 'எப்படியோ' பணம் கொடுத்து சம்மதிக்கவைக்கிறாள்..கூடவே அவனுடன் இணைந்தும் கொள்கிறாள்..."

 இங்கு தொடங்கும் காட்சிகள் துப்பாக்கி கூடிய கொஞ்சம் ரத்தமும் கௌபாய் ஆக்சன் காட்சிகளும் பழிவாங்குதளுக்கான பயணத்தை சொல்கின்றன..சுவாரஸ்யமான விசுவல்களுடன்..

TRUE GRIT திரைப்படத்தில் என்னை கவர்ந்த சுவாரஸ்யங்கள் :

2010 - ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு, திரைக்கதை, திரைப்ப்டம், ஒளிப்பதிவு என்று 10 ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கப்ட்டது குறிப்பிடதக்கதாகும்.ஆனால் இந்த அனைத்து விருதுகளையும் தெ சோஸியல் நெட்வேர்க் மற்றும் தெ கிங்க்ஸ் ஸ்பீச் ஆகிய திரைப்படங்களிடம் பறிக்கொடுத்தது கொஞ்சம் கவலையான விஷயம்..என்றாலும் உலகமெங்கும் பல விமர்சன்ர்களிடமிருந்து அமோக வரவேற்ப்பு பெற்றது குறிப்பிடதக்க சிறப்பாகும்.   
   
Jeff Bridges - திரைப்படத்தில் முதலில் குறிப்பிட வேண்டியவர்களில் ஒருவர்..கிரைஸி ஹார்ட் படத்துக்காக ஆஸ்கர் வென்றவர்..இவருடைய நடிப்பில் முதன் முதலாக பார்த்தது ஜோன் கார்பெண்டரின் இயக்கத்தில் 1988 - ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்டார்மென் படம்..மனிதனின் உருவத்தில் எலியனாக வந்து நடிப்பை சும்மா அசத்திருப்பார்..இப்படத்தில் இடம்பெறும் இவரது நடிப்பை இன்றுவரை மனதினிலே நிற்கிறது..அந்த படத்துக்கே இவர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கபட்டது மேலும் ஒரு சிறப்பாகும்// வழக்கம் போல துரூ கிரீட்டை பொருத்தவரை   இதிலும் அருமையான நடிப்பை மிக அழகாக ஆழமாகவும் வெளிபடுத்தியுள்ளார்..அறிமுகமாகும் காட்சியிலேயே வசனத்திலும் முகபானைகளிலும் சும்மா அசத்திருப்பார்..தான் சிறந்த நடிகன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்..கூடவே ஆஸ்கர் பர்ந்துரையும் பெற்றுவிட்டார்.... 


திரைப்படத்தில் நான் எதிப்பாராமல் பார்த்து அசந்துப்போன விஷயங்களில் ஒன்று Hailee Steinfeld நடிப்புதான்..இவ்வளவு சின்ன வயதில் (14) இத்தனை பெரிய நடிப்பு நான் எதிர்ப்பார்க்காத ஒன்று..முதல் காட்சியிலேயே நம்முடன் இணைந்துக்கொள்கிறார்...வ்வொரு காட்சியிலும் நம்மை நடிப்பின் மூலம் கவர்கிறார்//இந்த ஒரே ஒரு படத்துக்கு மட்டும் இதுவரை 20 க்கும் மேற்ப்பட்ட விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறார்..மேலும் இந்த வயதிலேயே சிறந்த துணை நடிகைக்காக ஆஸ்கருக்கு இந்த வயதில் பரிந்துரைக்கபட்டது ஒரு குறிப்பிட வேண்டிய சிறப்பாகும்..

 ஒளிப்பதிவு - கோயின் சகோதரர்களின் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளரான Roger Deakins/ரோஜர் டீகின்ஸ் அவர்களே இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கின்றார்..உலகளவில் சிறந்த ஒளி ஓவியர்களில் ஒருவராக கருதப்படும் டீகின்ஸ், 9 ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கபட்டவர்..உலகமெங்கும் 50 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர்..இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவெனில் "கோயன்களின் " கூட்டணியில் மட்டும் இதுவரை நான்கு ஆஸ்கர்களுக்கு பரிந்துரை செய்யபட்டதுதான்..இந்த படத்தை பொருத்தவரை ஒளிப்பதிவின் மேஜிக் முதல் காட்சியிலேயே ஆரம்பிக்கிறது..      

இயக்கம் - "கோயின்களின்" இயக்கமும் திரைக்கதை அமைப்பும் திரைப்படத்தின் கூடுதல் பிளஸ் போயிண்ட்..வழக்கம்போல நம்மை வெகுவாக ஒவ்வொரு காட்சியிலும் கவரச்செய்கிறார்கள்..இவர்களை பற்றி ஒரு நீண்ட பதிவோ அல்லது தொடர் பதிவுகளோ போட வேண்டு என்று தோன்றுகிறது..அண்ணன் சார்லஸ் அவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..  

ஒளிப்பதிவு, இயக்கம் என்பதை கடந்து நம்மை பிரமிக்கவைப்பது ஆர்ட் டைரக்க்ஷதான்..கௌபாய் காலத்தில் நடக்கும் கதையை கண் முன் வந்து நிறுத்திருக்கிறார்கள் Jess Gonchor மற்றும் Nancy Haigh..இதில் நான்சி ஏற்க்கனவே ஆஸ்கர் வென்றவர் என்பது குறிப்பிடதக்கதாகும்.சுமார் 38 கோடி பட்ஜெட்டில்..இந்த படம் உலகம் முழுக்க 250 கொடிக்கு மேல் வசூல் செய்துள்ளது..

தற்சமயம் திரைப்பட ரேட்டிங்க் தளமான ரோட்டென் தொமொதொஸில் 96 சதவீதம் ரேட்டிங்க் பெற்றதோடு மட்டுமல்லாமல் ஐம்டி தளத்திலும் 7.8 பெற்றுள்ளது மேலும் ஒரு சிறப்பாகும்..திரைப்படத்தின் புளூ ரேய் வெர்ஷன் இந்த வருடம் ஜுன் மாதம் 7 திகதி வெளியானது..நான் பார்த்தது டிவிடிதான்..

 திரைப்படத்தின் இசையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்..Carter Burwell - இவரும் கோயின் சகோதரர்களின் ஆஸ்த்தான இசையமைப்பாளரே..  பின்னனி இசை மனதை தொடுகிறது..அதுவும் எண்டிங் டைட்டலில் வரும் பாடல் மிக அருமை..நடிகர் Matt Damon - in நடிப்பும் படத்தின் ஒரு  சிறப்பாகும்..கொஞ்ச நேரம் வந்தாலும் கச்சிதமாக ஆர்பாட்டமில்லாமல் நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்..கோக்புர்ன் - க்கும் ரோஸ் - க்கும் உள்ள உறவை மிக அழகாக சொல்லிருக்கும் இயக்குனரை பாரட்ட வேண்டும்,,,அதேப்போல் இறுதி காட்சிகள் அனைத்துமே சுவாரஸ்யத்தின் உச்சம்..துப்பாக்கி சண்டை எல்லாமே துள் பறக்கும்.

  இறுதியாக, வார இறுதியில் ஒரு அழகான மாலை நேர மழை பொழுதில் கண்டு ரசிக்க ஒரு அருமையான படம் இந்த திரூ கிரிட் ஆகும்..குடும்பத்துடன் ஒன்றாக மகிழ்ச்சியாக அமர்ந்து கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு திரையோவியம்.

MY RATING : 8.2/10 : A NEW WESTERN CLASSIC

பின்குறிப்பு :
கடந்த ஒரு வாரமாக எழுதிக்கொண்டிருக்கும் பதிவிது..இதுவரை இந்த படத்த போல வேற எந்த படத்துக்கும் எங்க ஆரம்பிக்கிறது..எங்க முடிக்கிறதுன்னு தெரியாம முழிச்சதே இல்ல..இது எதனால என்கிற காரணம் கூட தெரில..ஆனா படம் மட்டும் மூனே நாளுல மூனு தடவ பார்த்துட்டேன்..இதவிட நல்ல படத்த பற்றி எப்படி எழுதுருதுன்னு தெரில..ஏதேவது தவறாக சொல்லிருந்தால் மன்னிக்கவும்..திருத்திக்க பார்க்கறேன்... 


ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்..மேலும் உங்கள் கருத்துக்களை Comments பெட்டியில் தெரிவிக்கவும் ..மிண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி.. வணக்கம்..  

2 comments:

  1. விமர்சனம் அருமை.
    பதிவு பெரிதாக இருந்தாலும், படிப்தற்கு மிகவும் சுலபமாக உள்ளது உங்கள் நடை, மற்றும் படிக்கச் துண்டும் எழுத்துக்கள்.

    ReplyDelete
  2. Arun J Prakash said...
    << விமர்சனம் அருமை.
    பதிவு பெரிதாக இருந்தாலும், படிப்தற்கு மிகவும் சுலபமாக உள்ளது உங்கள் நடை, மற்றும் படிக்கச் துண்டும் எழுத்துக்கள்>>>
    இந்த பதிவு சற்று நீளமாகதான் போய்விட்டது நண்பரே...ஒரு வாரமாக எழுதும் பதிவு என்பதால் சரியாக எடிட்டும் செய்ய இயலவில்லை.இருப்பினும் சிரமம் பாராமல் படித்ததற்கு நன்றிகள் ஆயிரம்..நாளடைவில் சுருங்க எழுத முயற்சி செய்கிறேன்..பாரட்டுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...