Wednesday 9 November 2011

APOLLO 13 - 1995 : விண்வெளியில் உயிர் போராட்டம்..

ண்ட நாட்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்த படம்.சில வேலை பழு காரணமாகவும் மற்ற படங்களில் அதிக கவனம் செலுத்தியதாலும் அது சாத்தியமாகாமல் இருந்தது.இனிமேலும் காலம் கடத்தினால் ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ணிவிடுவோம் என்ற எண்ணத்தில் இன்றைய சிறு "பார்வை"
============================================


 அப்போலோ 13 - 1995 - ஆம் ஆண்டு அமெரிக்க இயக்குனர் ரான் ஹோவர்ட் இயக்கத்தில் Tom Hanks, Kevin Bacon, Bill Paxton ஆகியோர் முறையே Jim Lovell, Jack Swigert மற்றும் Fred Haise என்ற கதாபாத்திரங்களில் விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களாக நடிக்க, இவர்களுடன் Gary Sinise,
Ed Harris மற்றும் Kathleen Quinlan மிக முக்கியமான துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.டைடானிக், அவதார் போன்ற படங்களில் பணிப்புரிந்த ஜேம்ஸ் ஹார்னர் இந்த படத்துக்கு இசையமைக்க திரைக்கதையை William Broyles, Jr. மற்றும் Al Reinert இணைந்து எழுதிய இந்த படம், விமர்சனம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றதோடு 9 ஆஸ்கர் பரிந்துரைகளில் அதில் இரண்டை வென்றது கூடுதல் சிறப்பாகும்.  .

=============================================================================

கதைச்சுருக்கம் :

விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்த்ராங்கும் அவரது சக வீரர்களும் நிலவில் காலடி எடுத்து வைத்த வருடமான 1969 - ஆண்டில் அதே நாளில் இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடும் வகையில் Jim Lovell (Tom Hanks) வீட்டு பார்ட்டியில் திரைப்படம் தொடங்குகிறது.இதனை தொடர்ந்து ஜிம், Jim Lovell, Fred Haise மற்றும் Ken Mattingly ஆகிய மூவர்கள் அப்போலோ 13 மூலம் நிலவுக்கு செல்ல ஏற்பாடு செய்யபடுகிறது.சில காரணமாக Mattingly குழுவிலிருந்து விலக்கபட Jack Swigert இவர்களுடன் இணைந்துக்கொள்கிறார்.ஒரு வழியாக பயணமும் ஆரம்பிக்கிறது.அதோடு சேர்ந்து பாதி வழியிலேயே கப்பலில் கடுமையான பிரச்சனைகள் உருவாகுகின்றன..



அது எந்த மாதிரியான பிரச்சனைகள்/சிக்கல்கள் ? அதிலிருந்து தப்பித்தார்களா ? எவ்வாறான முயற்சிகளை மேற்க்கொண்டார்கள் ? என்ற பல கேள்விகளுக்கு இந்த படம் பதில் சொல்கிறது..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++   
APOLLO 13 - 1995 DVD RIP : PART 1 AND PART 2  
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++  
===============================================================================

APOLLO - 1994 திரைப்படத்தில் என்னை கவர்ந்த சுவாரஸ்யங்கள் :

விண்வெளியை மிக ஆழமாகவும் அழகாகவும் சிறப்பாகவும் 2001 எ ஸ்பேஸ் ஓடிஸி, சொலாரிஸ் போன்ற மாஸ்டர்பீஸ்கள் காட்டிருந்தாலும் விண்வெளி கப்பலில் பயணிக்கும் வீரர்களின் பயணத்தை ரொம்ப Accurate - தாக இந்த அளவுக்கு காட்டிய படங்கள் மிக குறைவே..அந்த வகையில் இத்திரைப்படத்துக்கு மிக முக்கியமான ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
=============

     
மொத்தப்படத்திலும் நம்மை வெகுவாக எளிதாக கவரும் கதாபாத்திரம் டோம் ஹேங்ஸ் கதாபாத்திரம்தான்..Philadelphia 1993), Forrest Gump (1994)
போன்ற படங்களைப் போல பெரியளவில் நடிப்பு வழங்கும் கதை இது இல்லாவிட்டாலும், சிறந்த நடிகர் என்று மறுபடியும் பலருக்கும் நிரூபித்த திரைப்ப்டம் எனலாம்.ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கபட்ட கதாபாத்திரம் இது,அருமையாக  செய்துள்ளார்.   
===================



மேலும் இத்திரைப்படத்தில் Bill Paxton as Fred Haise மற்றும் Kevin Bacon as Jack Swigert ஆகியோரின் நடிப்பும் படத்துக்கு கூடுதல் சிறப்பு எனலாம்.விண்வெளியில் பயணிக்கும் வீரர்களில் இருவராக வரும் இவர்களின் நடிப்பு மிக அருமை.
=========================

தற்சமயம் சினிமா ரேட்டிங்க் தளமான ரோட்டேன் தோமொதொஸில் இந்த படம் 97 சதவீதம் பெற்றதோடு ஐம்டி தளமும் 7.5 ஸ்கோர் வழங்கியுள்ளது.
===============================

சுமார் 52 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உலகம் முழுவதும் 350 கோடிக்குமேல் வசூல் செய்துள்ளது.
==================================



70 ஆம் ஆண்டுகளில் அதுவும் இதுப்போன்ற சூழ்நிலைகளில் அன்றைய விஞ்ஞானிகள் அப்பொழுந்திருந்த தொழில்நுட்பங்களை வைத்துக்கொண்டு எந்தந்த வகைகளில் இதுப்போன்ற விண்வெளி வீரர்களை காப்பாற்ற முயன்றிருப்பார்கள் என்பதை கண்ணெதிறே கொண்டுவந்துள்ள திரைக்குழுவினரை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.
======================================== 

Lost Moon லோஸ்ட் மூன் என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்ட இந்த ப்டம் சிறந்த எடிட்டிங் மற்றும் சௌண்ட் மிக்ஸிங்காக ஆஸ்கர் வென்றது குறிப்பிடதக்கது.மேலும், 1994 - ஆண்டு வெளிவந்த இப்புத்தகம் உண்மையான விண்வெளி ஹீரோக்கலான Jim Lovell மற்றும் Jeffrey Kluger ஆகியோரின் அனுபவத்திலும் உண்மைச் சம்பவத்திலும் மலர்ந்திருபது இன்னும் ஒரு சிறப்பாகும்.
=====================================================



ஜேம்ஸ் ஹார்னரின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்துக்கு இன்னொரு பலம் எனலாம்.
================================================================

இயக்குனர் Ron Howard 



Ron Howard என்கின்ற Ronald William Howard, மார்ச் மாதம் 1 - ஆம் திகதி 1954 - ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர் ஆவார்.கலை ஆர்வமிக்க குடும்பத்தில் பிறந்த இவர், ஜோர்ஜ் லுகாஸ் இயக்கத்தில் 1973 - ஆம் வருடம் வெளிவந்த American Graffiti நடித்ததின் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமாக தொடங்கினார்..
1977 - ஆம் ஆண்டு Grand Theft Auto என்ற படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமானார்.தொடர்ந்து வந்த Splash (1984), Cocoon (1985), Willow (1988), போன்ற படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராகவும் ஹாலிவுட்டில் நிலை நிறுத்திக் கொண்டார்.2002 - ஆம் ஆண்டு இவர் எடுத்த A Beautiful Mind (2001) 4 ஆஸ்கர்களை வென்றதோடு சிறந்த படம் மற்றும் இயக்கம் என இவருக்கும் இரண்டு விருதினை வாங்கித்தந்தன.மேலும், இவருடைய பெரும்பான்மையான திரைப்படங்கள் பிஜி அல்லது பிஜி 13 ரேட்டிங் பெற்றது ஒரு குறிப்பிட்ட சிறப்பாகும்.ஹோவர்ட் இயக்கத்தில் புகழ்பெற்றவை சில : Frost/Nixon (2008), The Da Vinci Code (2006), Cinderella Man (2005) ஆகியவை அடங்கும்.    
=============================================================================
 
இறுதியாக, கண்டிப்பாக எல்லா சினிமா ரசிகர்களும் பார்க்க வேண்டிய ஹாலிவுட் படம் இந்த அப்போல்லோ 13 ஆகும்.

MY RATING : 8/10  
==============================================================================================================

அப்படியே இதையும் படிங்கபடித்த சில பிறப்பதிவுகள்


===============================================================================================================
கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

7 comments:

  1. விமர்சனம் நன்று. நல்ல ஒரு திரைப்படம்.

    ஒரு திரைப்படத்தின் விமர்சனம் மட்டுமின்றி, அந்த திரைப்படத்தின் பல சுவரசயமான விஷயங்களையும் கூறுகிறிர்கள். இதற்கு எனது பாராட்டுகள்.

    டாம் ஹான்க்ஸ், சிறந்த ஒரு நடிகர். தனது நடிப்பினால், இது போல 'சைன்ஸ் பிக்சன்' படங்களிலும் பார்பவர்களை மனதை கவரும் திறமைகொண்டவர்.
    திரைப்படங்களில் கதாபாத்திரங்களில் நடிக்காமல், கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பவர்.

    ReplyDelete
  2. இன்னும் இந்த படம் பார்க்கவில்லை.... பார்க்க வேண்டும்.
    உங்கள் நடை நன்றாக உள்ளது......

    ReplyDelete
  3. மற்றும் ஒரு கருத்து...தவறாக நினைக்க வேண்டாம்..
    நீங்கள் ஏன் உங்கள் வலைப்பூவை திரட்டிகளில் இணைப்பதில்லை... திரட்டிகளில் இணைதல் நிறைய பேர் நாம் வலைப்பூவை படிப்பார்கள்.....
    நேரம் இருந்தால் இந்த லிங்கை பார்க்கவும்..

    http://bloggernanban.blogspot.com/2010/12/2.html

    ReplyDelete
  4. Arun J Prakash said...
    << விமர்சனம் நன்று. நல்ல ஒரு திரைப்படம்.

    ஒரு திரைப்படத்தின் விமர்சனம் மட்டுமின்றி, அந்த திரைப்படத்தின் பல சுவரசயமான விஷயங்களையும் கூறுகிறிர்கள். இதற்கு எனது பாராட்டுகள்.>>>

    உங்கள் பாராட்டுக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  5. Arun J Prakash said...
    << டாம் ஹான்க்ஸ், சிறந்த ஒரு நடிகர். தனது நடிப்பினால், இது போல 'சைன்ஸ் பிக்சன்' படங்களிலும் பார்பவர்களை மனதை கவரும் திறமைகொண்டவர்.
    திரைப்படங்களில் கதாபாத்திரங்களில் நடிக்காமல், கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பவர்.>>>

    டாம் ஹான்க்ஸ், எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர் நண்பரே. எப்பொழுது இவரது படங்களை பற்றி எழுத ஆரம்பித்தாலும் தனியாக ஆர்வம் மனதில் வந்துவிடும். அது இவர் நடிக்கும் படங்களினால்தானோ என்னமோ என்று தெரியவில்லை. டாம் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமே இல்லை.அதற்கு இவர் வாங்கிய விருதுகளே சாட்சி நண்பரே.
    மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் இவரைப் பற்றி நிறைய பேசலாம்..உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. ராஜ் said...
    இன்னும் இந்த படம் பார்க்கவில்லை.... பார்க்க வேண்டும்.

    உங்கள் நடை நன்றாக உள்ளது......
    உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி நண்பரே..வாய்ப்பு கிடைத்தால் படத்தை பாருங்கள்.நல்ல படம்.

    ReplyDelete
  7. ராஜ் said...
    << மற்றும் ஒரு கருத்து...தவறாக நினைக்க வேண்டாம்..
    நீங்கள் ஏன் உங்கள் வலைப்பூவை திரட்டிகளில் இணைப்பதில்லை... திரட்டிகளில் இணைதல் நிறைய பேர் நாம் வலைப்பூவை படிப்பார்கள்.....
    நேரம் இருந்தால் இந்த லிங்கை பார்க்கவும்..
    http://bloggernanban.blogspot.com/2010/12/2.html >>>

    தங்களுக்கு முதலில் நன்றி.இதில் தவறாக நினைக்க எதுவும் இல்லை நண்பரே.
    ஆரம்பத்திலிருந்தே பதிவுகளை திரட்டிகளில் இணைத்துக்கொண்டுதான் வருகிறேன்.திரட்டிகளின் ஓட்டு பட்டையை இணைக்கதான் இதுவரை
    வாய்ப்பும் நேரமும் கிட்டவில்லை.தங்களது விருப்பத்தின் வழியும் உடன் இணைத்த
    வெப்சைட் உதவியுடனும் இன்று ஒரு சில திரட்டிகளை இணைத்துள்ளேன்..இன்னும் சில நாட்களில் மிச்சத்தையும் இணைத்துவிடுகிறேன்..
    தங்களது கருத்துக்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...