Sunday 30 October 2011

மை மேஜிக் - 2007 - கேன்ஸில் தமிழ் பேசிய சிங்கப்பூர் சினிமா...


இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்க்கான PALME D'Or பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும்..

 CANNES : PALME D'Or : 2007


 ஒரு சில மாதங்களுக்கு முன்பு, சமீபத்தில் அதாவடு கடந்த 10 ஆண்டுகளில் திரைப்படவுலகின் மிகப் பெரிய திரைவிழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் பல பிரிவுகளில் போட்டியிட்ட படங்களை பற்றி தேட வேண்டும் என்றும் ஆர்வம் ஏற்பட்டது...இதன் பேரில் பலதரபட்ட நாடுகளிலிருந்து பல படங்களை காண வாய்ப்பு கிடைத்தது..முதலில் நான் தேடியது சிறந்த படங்களை தேர்வு செய்யும் பிரிவான Palme D'or.. வருட கணக்கில் தேடிய நிலையில் என்னை பெரிய அளவில் அதிர்ச்சிகுள்ளாக்கிய ஆண்டு 2007.



மிகுந்த அளவில் ஆச்சரியத்தை வழங்கியது... அந்த வருடத்துக்காக பரிந்துரைக்கபட்ட சிறந்த படங்களின் பட்டியலில் இருந்த மை மேஜிக் என்ற சிங்கபூர் படம்தான்..அதிர்ச்சிக்கான முதல் காரணம் சிங்கப்பூர் என்ற வார்த்தையே..அண்டை நாடான மலேசியாவில் வசித்துக்கொண்டு இந்த பெருமையை உணராமல் அதுவும் தெரியாமல் இருந்ததை எண்ணி வெட்கபட்டேன்..வருத்தத்தில் ஆழ்ந்தேன்..

 அது ஒரு பக்கம் இருக்க ....ஒரு தமிழ் பேசும் சினிமா, ஒரு சீன இயக்குனரால் உலக திரையரங்கில் நிமிர்ந்து நின்றதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்தேன்..இதுவே, இந்த படத்தை இங்கு பகிர்வதற்கு முதற் காரணம்//  
        
=================================================
++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++

   மை மேஜிக் - 2008 - ஆம் ஆண்டு சிறந்த சிங்கப்பூர் இயக்குனரான எரிக் கூவின் இயக்கத்தில் Bosco Francis, Jathisweran மற்றும் Grace Kalaiselvi
ஆகியோர்கள் தங்களதுனடிப்பை தததம் கதாபாத்திரங்களில் நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர்.ஒரு குடிகார தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவை கொஞ்சம் கூட திகட்டாமல் ஒரு ஒன்றரை மணி நேரம் நம்மை சினிமா திரைக்குள் கொண்டுச்செல்கிறது..இதுவரை சிங்கபூர் திரைப்படங்களை பார்க்காதவர்களுக்கு இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை..


   படத்தின் திரைக்கதையை இயக்குனருடன் இணைந்து Wong Kim Hoh என்பவர் எழுத, Kevin Mathews மற்றும் Christopher Khoo திரைப்படத்துக்கு இசையமைத்திருக்கின்றனர்..மேலும், ஒளிப்பதிவை Adrian Tan கவனிக்க, படத்துக்கு Siva Chandran மற்றும் Lionel Chok ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளார்.
   
==========================================================================================================================
MY MAGIC - 2007  திரைப்ப்டைப்பில் சில சுவாரஸ்யங்கள் :

சிங்கப்பூரிலிருந்து முதன் முறையாக கேன்ஸ் திரைப்படவிழாவில் அதுவும் பால்மா டியோர் விருதுக்கு பரிந்துரைக்கபடும் முதல் படமாகும்..
================

மேலும், 2009 ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு படத்திற்க்கான ஆஸ்கருக்கு இந்த படம் சிங்கப்பூரிலிருந்து அனுப்பிவைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும் (Short List) ..ஆனால், இறுதிகட்ட தேர்வில் இந்த படம் பரிந்துரை பெறவில்லை..(Nomination)
=====================


 படத்தில் ஹீரோவாக வரும் Bosco Francis அவர்களின் நடிப்பு அருமை..Francis என்ற கதாபாத்திரத்தில் கதைக்கு உயிரை கொடுத்திருக்கிறார்..
===========================

Francis மகனாக வரும் Jathisweran கதைக்கு தேவையான இயல்பான நடிப்பை நன்றாக வெளிபடுத்தியுள்ளார்..
================================


பிரான்ஸ் நாட்டின் Le Monde வார பத்திரிகையால், 2008 ஆண்டினில் வெளிவந்த சிறந்த ஐந்து படங்களில் ஒன்றாக வாக்களிக்கபட்டது மேலும் ஒரு சிறப்பாகும்..
==================================== 



  இவரை பற்றி ஏதாவது ஒரு பதிவில் இதுவரை எழுத வேண்டும் என்று எண்ணி இருந்தேன்..காரணம் இவர் சிறந்த இயக்குனர் என்பதை தாண்டி சிங்கப்பூர் சினிமாவை உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தவர்களில் மிக முக்கியமான ஒருவராவார்..இவர் எடுத்த பீ வித் மி என்ற படமே இவரை முதன் முறையாக பல சினிமா அரங்கினில் தலைகாட்டச் செய்தது எனலாம்..2005 ஆம் வருடம் வந்த இந்த படம், European Film Awards, Stockholm Film Festival, Mar del Plata Film Festival, Tokyo International Film Festival போன்ற பல புகழ்பெற்ற திரைப்பட விழாவுக்கு பரிந்துரைக்கபட்டதோடு மட்டும் அல்லாது அதில் சில விருதுகளையும் வென்றது..இதனைத் தொடர்ந்து இவர் எடுத்த படம்தான் மை மேஜிக்காகும்.Asiaweek சஞ்சிகை, 1999 - ஆண்டு 25 exceptional Asians களில் ஒருவராக அறிவித்தது.. தற்போது இவரது இயக்கத்தில் வெளிவந்த படமான Tatsumi (2011), ஆஸ்கர் விருதுக்கு சிங்கப்பூரிலிருந்து submission செய்யபட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்..     
================================================ 


  இறுதியாக, சமீப காலத்தில் தமிழ் பேசும்  சினிமாவை உலக அரங்கில் நிமிர்த்திய படங்களில் இதுவும் ஒன்று என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்..இந்திய சினிமாவோடு இதனை ஒப்பிடும்போழுது மேக்கிங்கிலும் திரைவடிவத்திலும் வேறுபட்டாலும், தன்னுடைய தனி வழியில் இந்த படம் வலம் வருகிறது.. எனவே, அனைத்து தமிழர்களும் கண்டிப்பாக இந்த படத்தை பார்த்து, மேலும் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாட்டு திரைவுலகம் மென்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தங்களால் முடிந்த ஆதரவை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்... 

MY RATING : 7.5/10
=================================================

படித்து ரசித்த பிறப்பதிவுகள் சில :


இதுவோடு, திரைப்பாடகரான கார்த்திக் அவர்களை எனக்கு மிக அதிகமாக பிடிக்கும்..இவரும் இங்கு புகழ்பெற்ற மலேசியா பாடகரான திலிப் வர்மனும் இணைந்து பாடிய மலேசிய பாடலை இங்கு இணைத்திருக்கிறேன்..சில மாதங்களாகவே இதனை முனு முனுத்து வருகிறேன்..நான் ரசித்த பாடலை வாசகர்களும் விரும்புவிர்கள் என்ற நம்பிக்கையில்..       

==================================================        
வாசகர்கள் தயவு செய்து தங்களது கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளலாம்...எதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை..
நன்றி..வணக்கம்

4 comments:

  1. நல்ல பதிவு. ஆனால் இங்கு காணக் கிடைக்குமா தெரியவில்லை.

    ReplyDelete
  2. பதிவு அருமை, தெரியாத பல விஷயங்கள் உங்கள் பதிவுகளில் தெரிந்து கொள்கிறேன்.
    இன்னும் இது போல் பலர் அறிய படாத படங்களை எதிர்பார்கிறேன்.
    வித்தியாசத்துல (விமர்சன் மற்றும் எழுத்து நடை) பல பெரிய தலைங்கலையே துக்கி சாப்ற்றுவிங்க போல.........

    ReplyDelete
  3. Muruganandan M.K...
    << நல்ல பதிவு. ஆனால் இங்கு காணக் கிடைக்குமா தெரியவில்லை.>>>
    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.மேலே, பதிவில் உள்ள இலவச தரவிறக்கம் (FREE DOWNLOAD) செய்வதற்கு லிங்கினை கொடுத்துள்ளேன்(MY MAGIC - 2007 DVDRIP).தேவைபட்டால் நீங்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.ஒருவேளை தங்களுக்கு நேரம் கிடைப்பின் படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.மீண்டும் பல நன்றிகள்.உங்கள் ஆதரவோடு..குமரன்.

    ReplyDelete
  4. Arun J Prakash...
    << பதிவு அருமை, தெரியாத பல விஷயங்கள் உங்கள் பதிவுகளில் தெரிந்து கொள்கிறேன். இன்னும் இது போல் பலர் அறிய படாத படங்களை எதிர்பார்கிறேன். வித்தியாசத்துல (விமர்சன் மற்றும் எழுத்து நடை) பல பெரிய தலைங்கலையே துக்கி சாப்ற்றுவிங்க போல.......>>>
    நண்பரே, தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி.உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயல்கிறேன்..உண்மையை சொல்ல வேண்டுமெனில் தங்களை போன்ற பெரிய அனுபவமிக்க சிறந்த எழுதாளர்களின் (வலைப்பூ அண்ணமார்கள்) கைவண்னங்களை படிப்பதன் மூலமே ஓரளாவது எழுத முயற்சிசெய்கிறேன்.அதற்க்கே நான் பல நன்றிகள் கூற வேண்டிய கடமையில் இருக்கிறேன்.மற்றபடி எழுதுவதற்கு இன்னும் நிறைய உள்ளது.மேலும், வளர்வதற்கு தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் கருத்துகளும் கட்டாயம் அவசியம் நண்பரே.மீண்டும் பல நன்றிகள்..உங்கள் ஆதரவோடு..குமரன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...