Tuesday 18 October 2011

உலக திரைப்பட தொடர்கள் : ரோபோகாப் ROBOCOP - 1987 : நகர போலிஸ் அதிகாரியாகும் ரோபோட்...


எந்திரன் திரைப்படத்துக்கு நான் பார்த்த ரோபோட் கதையம்சத்தை கொண்ட படம் இது.

மேல படிக்கிறதுக்கு முன்னாடி கீழ உள்ள டிவிடிரிப்பை பயன்படுத்தி டவுன்லோட் போடுங்க.. காரணம் இது செம்மையான படம்..    
=================================
================================ 
Film : Robocop       Year : 1987
Country : America     Rated : R (Parents Guide, Please View >>>)
Director : Paul Verhoeven  Writters : Edward Neumeier, Michael Miner
Stars : Peter Weller, Nancy Allen, Dan O'Herlihy, Ronny Cox
Awards : Nominated for 2 Oscars. Another 11 wins & 10 nominations See more awards
=======================================

  டோடல் ரீகால் (1990), பேசிக் இன்ஸ்டிங்க்ட் (1992) திரைப்படங்களின் வழி அமெரிக்க சினிமாவில் நீங்கா இடம் பிடித்த திறம் வாய்ந்த நெதெர்லாந்து இயக்குனரான பால் வெர்ஹோவென் 1987 - ஆம் வருடம் எடுத்த படம்.எதிர்கால டெட்ராய்ட் நகரினில் ஏற்படும் கட்டுபடுத்த முடியாத கடுமையான வன்முறைகளின் பேரில், இந்த பிரச்சனையை மேற்க்கொள்ள உருவாக்கபடும் போலிஸ் ரோபோட்டை பற்றிய திரைப்படம் இது.உலகாளாவிய நிலையில் பல விமர்சனர்களாலும் ரசிகர்களாலும் சிறந்த அறிவியல் புனை படமாக கருதப்படும்  இத்திரைப்படத்தில், அலெக்ஸ் ஜேம்ஸ் முர்பி என்ற போலிஸ் அதிகாரியாகவும் ரோபோகாப்பாகவும் Peter Weller நடிக்க இவருடன் Nancy Allen, Dan O'Herlihy, Ronny Cox, Kurtwood Smith ஆகியோர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.இப்படம் சிறந்த சவுண்ட் எஃபெக்ட்க்காக ஆஸ்கர் வென்றது 
குரிப்பிடதக்கதாகும்
  
ரோபோகாப் திரைப்படத்தில் சில சுவாரஸ்யங்கள்:
==================== 
இந்த திரைப்படம் சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் ஆகிய இரண்டு ஆஸ்கர்களுக்கு பர்ந்துரைக்கபட்டது.மேலும், ஸ்பெஷல் விருதாக சிறந்த சவுண்ட் எஃபெக்ட்க்காக ஆஸ்கர் வென்றது குறிப்பிடதக்கதாகும்..

=====================

படத்தில் இடம் பெற்றுள்ள கடுமையான வன்முறைகாட்சிகளுக்காகவே இந்த திரைப்படம் X ரேட்டிங் பெற்று வெளிவந்ததது...சில காட்சிகள் அகற்றப்ட்ட பின்னறே R ரேட்டிங் கிடைத்தது..
=========================
பிரிட்டிஷ் இயக்குனரான கென் ரஸ்சல் அவர்கள் ரோபோகாப் படத்தை சிறந்த அறிவியல் புனைத்திரைப்படமாக குறிப்பிட்டுள்ளார்.(மெட்ரோபோலிஸ் படத்திற்க்கு பிறகு).

=================================

பிறகு படத்தின் கதாநாயகனான Peter Weller, தனக்கு கிடைத்த இரட்டை கதாபாத்திரங்களை அருமையாக பயன்படுத்தியுள்ளார்.படத்தின் முதற்பாதியிலேயே தன்னுடைய ஒரிஜினல் உருவத்தை இழந்துவிட்டு (படத்த பாருங்க), எங்கடா மேல போயுருவாறோன்னு (அது படத்தோட ஹைல்லட்டான சீன்களில் ஒன்று) மனச டக்டக்குன்னு பன்னிவிட்டு, இரண்டாம் பாதியில் ரோபோவாக வந்து நமது (எனது) கண்களை கலக்குவது அசத்தல்..படத்தில் ரோபோட் மேக்கப்புக்காக இவர் பட்ட  கஷ்டங்களை சில இணையத்தளங்களை படித்திருக்கிறேன்.பிரச்சனையை சமாளிக்க முடியாமல் ரோபோ உடைக்குள்ளே air conditioner எல்லாம் பொருத்தி இருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்..

=========================================
இத்திரைப்படத்தில் திரைக்கதையின் பங்கு மிகவும் அதிகம்..அந்தவகையில் Edward Neumeier மற்றும் Michael Miner கண்டிப்பாக பாரட்டதக்கவர்களே..ஒரு சைன்ஸ் பிக்க்ஷ்ன் கதையை எந்தளவுக்கு ஆக்க்ஷ்னையும் திரில்லரையும் கலந்து ஒரு சிறந்த திரைவிருந்தாக வழங்க முடியும் என்பதற்க்கு இந்த படம் ஒரு உதாரணம் எனலாம்...டெர்மினேட்டர் படத்தை போல..ஒவ்வொரு காட்சியிலும் விறு விறுப்பையும் வேகத்தையும் அதிகரித்திருப்பது இன்னும் ஒரு சிறப்பாகும்..திரைக்குழுவினர் அனைவரும் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்களே.

=================================================

கடையில் புகுந்து கொள்ளையடிக்கும் ஆளை பிடிக்கும் காட்சி, கேஸ் ஸ்டேஷன் காட்சி மற்றும் இறுதி காட்சிகள் என்று ரோபோகாப்பின் அறிமுகத்திற்க்கு பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் விறு விறுப்பின் உச்சம் எனலாம்.மிக குறிப்பாக ஒரு பெண்ணிடம் தவறாக நடக்கும் முயற்சி செய்யும் இரண்டு ஆட்களை "கவனிக்கும்" காட்சிகள் அனைத்தும் ரோபோகாப்பின் புத்திசாலிதனத்தை பிரபலிக்கிறது..அதுவும் இது இயக்குனரின் ஐடியாவாம்..கலக்கலான காட்சி..    

====================================================

உலகளவில் பல விமர்சனக்காரர்களாலும் பத்திரிக்கைகளாலும் சிறந்த 80 - ஆம் ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படமாக கருதப்படுகிறது.ரோட்டன் டொமொட்டோவிலும் தற்ப்பொழுது 88% சதவீதம் பெற்றுள்ளது.2007 இல் Entertainment வீக்லி - இன் சிறந்த ஆக்சன் திரைப்படப் பட்டியலில் 14 வது இடத்தை பிடித்தது.மேலும், Empire பத்திரிக்கை சிறந்த 500 படங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.

=======================================================
சுமார் 13 கோடி பட்ஜெட்டில் உலகமெங்கும் 50 கோடிக்கு மேல் வசூல் பெற்றுத்தந்தது குறிப்பிடதக்கதாகும்..

===============================================================

படத்தின் கிளைமக்ஸ் பிரமாண்டமான சண்டை காட்சிகள் அனைத்தும் நீண்ட நாட்களுக்கு மனதில் பதியக்கூடியவை.VISUALLY MOST STUNNING...

=====================================================================


  1938 - ஆண்டு 18 திகதி ஜூலை மாதம் Wim Verhoeven என்ற பள்ளி ஆசியருக்கும் Nel van Schaardenburg என்ற தொப்பி செய்பவருக்கும் நெதெர்லாந்திலுள்ள ஆம்ஸ்டிரடாமில் பிறந்தார்.Business Is Business என்ற திரைப்படத்தை முதன் முதலாக 1971 - ஆம் ஆண்டு இயக்கினார்.தொடர்ந்து வந்த Turkish Delight வசூல் மற்றும் விமர்சனங்கள் ரீதியில் பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி. சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கது.இதன் வழி தன்னுடைய பெயரை அமெரிக்க சினிமாவிலும் அறிமுகபடுத்திக்கொண்டார். இதன் பிறகு இவர் இயக்கிய Katie Tippel (1975), Soldier of Orange (1977), Spetters (1980)
மற்றும் The Fourth Man (1983) ஆகிய நான்கு திரைப்படங்கள் உலகளவில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது இன்னொரு சிறப்பாகும்.

  Rutger Hauer மற்றும் Jennifer Jason Leigh நடித்த Flesh & Blood என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் காலடி எடுத்துவைத்தார்தொடர்ச்சியாக ரோபோகாப் - 1990, பேசிக் இன்ஸ்டிங்க் - 1992 மற்றும் டோடல் ரிக்கோல் திரைப்படங்கள் இவருக்கென தனி ஸ்டலையும் பாதையையும் பெற்றுத்தந்தன.மேலும் ஹாலிவுட்டில் சிந்த இயக்குனர் என்ற அங்கீகாரத்தையும் வாங்கித்தந்தது.கூடவே பேசிக் இன்ஸ்டிங்கின் மூலன் கவர்ச்சி புயல் ஷாரோன் ஸ்டோனிடமிருந்து அறை வாங்கி கன்னத்தையும் வீங்கிக்கொண்டார்..ஹி..ஹி.. சுமார் 20 வருடங்கள் கழித்து தன் தாயகமான நெதெர்லாந்துக்கு திரும்பிச் சென்று இயக்கிய திரைப்படம்தான் Black Book - 2007.விமர்சன ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மாட்டுமல்லாது இயக்குனருக்கு பல உலக விருதுகளை பெற்றுத்தந்தது.தற்ப்பொழுது இவர் தனது அடுத்தப் படைப்பாக Hidden Force என்ற படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

பால் வெர்ஹோவென் - என்னை கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர்..இனி வரும் பதிவுகளில் இவரது படங்களை அவ்வப்போது பார்க்கலாம்.
===============================================

   இறுதியாக, எல்லா சினிமா ரசிகர்களும் தங்கள் வாழ்நாளில் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று.அதுவும் ஆக்சன் மற்றும் சைன்ஸ் ஃபிக்க்ஷன் திரைப்பட விரும்பிகள் அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு கிளாசிக்காகும்.நேரம் போவதே தெரியாது..  
===================================== 
MY RATING : 7.5/10
=============================== 


ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்..மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்.அதுவரை..

நன்றி.வணக்கம்




7 comments:

  1. நல்ல அலசல்..... நீங்கள் சைக்கோ படம் பற்றி எழுதியிருந்த பதிவு நன்றாக இருந்தது. இன்னும் உலகத் திரைப்படங்களைப் பற்றி அதிகம் எழுத வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. எஸ்.கார்த்திகேயன். (S.Karthikeyan.).

    மிக்க நன்றி நண்பரே..உங்களது விருப்பத்தை தொடர்ந்து நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்..

    தங்களது யாரவள்! கவிதையே படித்தேன்..ரசித்தேன்..வாழ்த்துக்கள்..மென்மேலும் வளர..

    ReplyDelete
  3. hi kumaran unggal pathivugalai padithida vaaippu kidaittatu vazhttukkal.

    ReplyDelete
  4. Anonymous..
    hi kumaran unggal pathivugalai padithida vaaippu kidaittatu vazhttukkal.

    தொடர்ந்து படியுங்கள்..நன்றி..உங்களது ஆதரவு அவசியம்..

    ReplyDelete
  5. @@ garuDa @@
    தங்களது முதல் வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  6. இது நான் 2 ஆவதாக பார்த்த ரோபோ திரைப்படம்....முதலாவது படம் டேர்மினேட்டர்...உடனேயே 2,3 ஐ வாங்கிப்பார்த்துவிட்டேன்...1,2 நன்றாக இருந்தது 3 ஆவது ரோபோகொப் எனக்கு பிடிக்கவே இல்லை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...