Monday 30 January 2012

Psycho / சைக்கோ (1960) : அவளை கொன்றவன் யார் ??

ஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) என்ற தொடரின் முந்தைய பதிவுகளை படிப்பதற்கு : 


===============================================================

Film : Psycho            Years : 1960
Country : United States      Rating : R
Director : Alfred Hitchcock    
Writers : Joseph Stefano (screenplay), Robert Bloch (novel)
Stars : Anthony Perkins, Janet Leigh and Vera Miles
Awards : Nominated for 4 Oscars. Another 5 wins & 3 nominations See more awards »

  சுமார் 50 ஆண்டுகள் கடந்தும், இன்றுவரை உலகம் முழுவதும் உள்ள சினிமா காதலர்களால் கொண்டாடப்படும் ஹிட்ச்காக்கின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்றுதான் சைக்கோ. ஹாலிவுட் மட்டுமின்றி உலக சினிமாவின் மிகச் 
சிறந்த கிளாஸிக்குகள் பட்டியலில் தவறாது இடம்பெறும் ஒரு உனனத படைப்பாக இதனை கூறலாம். 1959 - ஆம் ஆண்டு எழுத்தாளர் Robert Bloch கைவண்ணத்தில் ஒரே தலைப்பிலான நாவலை அடிப்படையாக கொண்டு 1960 - ஆம் ஆண்டு Joseph Stefeno - வின் மிகச் சிறந்த திரைக்கதை அமைப்பில் ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியானது.4 ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கபட்ட இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் Anthony Perkins, Vera Miles, John Gavin, Martin Balsam, John McIntire, Janet Leigh ஆகியோர் நடித்து கதைக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளனர்.  


ஒரு திரைப்படத்தின் ஏறக்குறை முழு கதையையும் முன்னமே இணையத்தளங்களில் படித்துவிட்டு படங்களை பார்க்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டவன் நான்.ஆனால் ஹிட்ச்காக்கின் திரைப்படங்களுக்கு மட்டுமே இந்த வழக்கத்தினை சில வேளைகளில் விதிவிலக்காக வைத்துள்ளேன்.அதுவும் மேற்கூறிய திரைப்படத்திற்க்குப் பிறகுதான் என்பதில் பெரிய ஆச்சரியமில்லை.ஏனெனில் குறிப்பாக ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் அவர்களின் திரைப்படங்களை கதைகள் அறியாமலும் எந்த ஒரு கற்பனைகள் செய்யாமலும் பார்க்கும் பொழுது சற்று அதிகமாகவே சுவாரஸ்யங்களை உணர்வதும் ஒரு காரணம் எனலாம்.சஸ்பிஷன் போன்ற படங்களை தவிர்த்து இது போன்ற திரைப்படங்களின் கதைகளை சொல்வதை தவிர்க்கலாம் என்று விரும்புகிறேன் (தவறாக நினைத்தால் மன்னிக்கவும்).அதுவும் நீங்கள் ஒருவேளை இத்திரைப்படத்தை முதல் முறையாகப் பார்க்க விரும்பினால், இந்த அணுகுமுறை சரியாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்.

சைக்கோ திரைப்படத்தைப் பற்றிய சில 
=============================================
சுவாரஸ்யங்கள் :
======================= 


உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டே எழுத்தாளர் Robert Bloch  இந்நாவலை எழுதியுள்ளார்.மேலும், இயக்குனரான ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் கலை உலக வரலாற்றில் இறுதியாக எடுத்த கருப்பு வெள்ளை திரைப்படம்தான் இந்த சைக்கோ.
=======================

  "A boy's best friend is his mother"
      - Norman Bates in Psycho 

மேலும், இத்திரைப்படத்தில் Norman Bates  என்ற கதாபாத்திரத்தில் வரும் The Trial (1962)  படப்புகழ் Anthony Perkins..கண்களினாலேயே நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.. சாதாரணமான ஆள் நடமாற்றமே இல்லாத பேட்ஸ் என்னும் மோட்டெலுக்கு உரிமையாளராக வந்து இறுதிவரை தனது சின்ன சின்ன ஆழமான எக்ஸ்பிரஷன்களின் மூலம் தன் நடிப்புலக வரலாற்றில் ஒரு மைல் கல்லை தொட்டிருக்கிறார்..நல்ல நடிப்பாற்றலை ஆதரிக்கும் அல்லது விரும்பும் எந்த ஒரு ரசிகருக்கும் இவரது நடிப்பு ஒரு விருந்து எனலாம்.அதுவும் ஆக இறுதி காட்சியில் பின்னனியில் அந்த பெண் குரலுக்கு..யெப்பா சான்ஸே இல்லை..
===============================

அடுத்தது, Marion Crane என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் Janet Leigh..தொடக்க காட்சியில் காதலுடனான உரையாடலில் ஆரம்பமாகும் .இவரது திருட்டு முக பார்வைகள் படம் பாதிவரை நிலவுகிறது.."திருட்டு" என்ற வார்த்தைக்கு பொருத்தமாகவும்  கதையில் நடந்துக்கொண்டு ஆஸ்கர் பரிந்துரையும் கூடவே பெற்றுவிட்டார்..இவர்தான் கதாநாயகி இனி இவரை சுற்றிதான் கதை என்று அனைவரும் நம்பும்படியாக வைத்துவிட்டு பிறகு கொடுக்கு வெடி இருக்கிறதே..அதுதான் ஹிட்ச்காக்கின் பன்ஞ்.
========================================

இன்றுவரை சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத பல அற்புதமான எவெர்கிரீன் காட்சிகள் படம் முழுவதும் நிரம்பி வழிகிறது.குறிப்பாக, அந்த குளியலறைக் காட்சி இன்றும் பலரை அதிர்ச்சியில் உறையவைப்பதாக படம் பார்த்த புதிதில் இணையத்தில் படித்தேன்.கேமரா கோணங்கள், ஆர்ட் டைரக்ஷன், துளிக்கூடச் சலிப்படையச் செய்யாதக் காட்சிக் கோர்வைகள், கதைச் சொன்ன விதங்கள் என்று ஒளிப்பதிவாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினரின் உழைப்பு ஒவ்வொரு ஃபேரேம்களிலும் தெரிவதோடு இதுவே இவர்களை ரசிகர்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்க்கச் செய்கின்றது.
==============================================

சிறந்த இயக்கம், ஒளிப்பதிவு,கலை மற்றும் நடிப்பு என்று 4 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும்.
==================================================

Entertainment Weekly வெளியிட்ட சிறந்த திகில்ப்படங்கள் வரிசையில் சைக்கோ ஏழாவது இடத்தைப் பிடித்தது சிறப்பாகும்.அதோடு 2007 ஆம் ஆண்டு American Film Institute வெளியிட்ட மிகச் சிறந்த திரைப்பட பட்டியலில் பதினேழாவது இடத்தையும் பிடித்துள்ளது.
======================================================

கடந்த நூற்றாண்டின் அமெரிக்காவில் உருவாக்கபட்ட மிகச் சிறந்த திகில் திரைப்படமாக உலகமெங்கும் உள்ள ரசிகர்களாலும் விமர்சனர்களாலும் பரவலாக கருதப்படும் சைக்கோஇன்றைய பல கலைஞர்களுக்கும் திரைப்படங்களுக்கும் ஒரு முன்னோடியாக திகழ்வதை யாராலும் மறுக்க முடியாது என்றால் அது மிகையாகது.

============================================================


Infamous for its shower scene, but immortal for its contribution to the horror genre. Because Psycho was filmed with tact, grace, and art, Hitchcock didn't just create modern horror, he validated it.

            - Rotten Tomatoes


உலகளாவிய நிலையில் பல ரசிகர்கள் மறும் விமர்சகர்ளாலும் 
பெரிய அளவில் பாராட்டை தொடர்ந்து பெற்று வரும் இத்திரைப்படம் தற்பொழுது ரோட்டென் தொமொதோஸில் 99 % சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளது.
==========================================

பெர்னார்ட் ஹெர்மனின் இசை படத்துக்கு அஸ்த்திவாரம் என்று சொல்லுமளவுக்கு அவ்வளவு பக்குவமாக அமைத்திருக்கிறார்.அவர் போட்ட டீம் இசை இன்றுவரை என் கணினியில் வைத்துள்ளேன்.

=======================================================================


கடந்த 50 ஆண்டுகளில் இந்த படத்தின் தாக்கத்தில் மட்டும் உலகளவில் நிறைய படங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.  நல்ல ஹாரர் படங்கள் என்றுமே நீங்காத உணர்வுகள் கொடுக்க கூடியவை.. இது தனிப்பட்ட முறையில் நான் சில படங்களில் அனுபவித்தது.இந்த படமும் அந்த வகையை சேர்ந்ததே.இந்த ஒரு வருடத்தில் ஐந்து முறையாவது பார்த்து ரசித்த படம்..கண்டிப்பாக ஹாரர் பிரியர்கள் மட்டுமன்றி சினிமா வெறியர்கள் பார்க்க வேண்டிய ஒரு அருமையான சைக்கலோஜிக்கல் ஹாரர் திரைப்படம் சைக்கோ (1960). 


IMDB : 8.6 / 10
MY RATING : 8.7 / 10 : A Chilling Horror Piece Of Art.
===============================================================


   கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்.ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.


உங்கள் ஆதரோவோடு,

41 comments:

  1. விமர்சனம் நன்று.
    நல்ல படம் படத்தோட கதையே சொல்லாம திரைப்படத்தின் சிறப்புகளை மட்டும் எழுதி உள்ளீர்கள்.....இது போல் நல்ல ஹாரர்/ மிஸ்டரி திரைப்படங்களின் கதை சொல்லாமல் இருப்பதே சிறந்தது. படம் பார்க்கும் பொது கட்சிகளின் சுவாரசியங்கள் குறையாமல் இருக்கும்.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான விமர்சனம். படத்தை என் படக் கலெக்சனில் நீண்ட காலமாக வைத்திருந்தாலும் ப்ளாக் அன்ட் வைய்ட் காரணமாக பார்க்க ஒரு இன்ட்ரெஸ்ட் வருதில்ல. இதே காரணத்தினால் பார்க்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் இன்னொரு படம் Schindler's List.

    எப்ப மூட் வந்து எப்ப பார்க்கப் போறேனோ தெரியல.

    ReplyDelete
  3. << MuratuSingam said...>>>

    தங்களது வருகைக்கு பின்னூட்டத்துக்கும் எனது இனிய நன்றிகள் நண்பரே.
    நீங்கள் கூறியதை போல இனிமேல் ரொம்ப மர்மமான படங்களின் கதைகளை முடிந்தவரை எழுதுவதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்..ஆனால், அதே சமயம் இதனால் பதிவை நீட்டிப்பதற்காக சில கூடுதல் சமாச்சாரங்களையும் போட வேண்டிய கட்டாயம் வருகிறது.பார்ப்போம்.வணக்கம்.

    ReplyDelete
  4. << ஹாலிவுட்ரசிகன் said...>>>

    தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் நண்பரே.
    முதலில் Schindler's List பாருங்கள்..சிறந்த படம்.ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் மலர்ந்த திரைக்காவியம்.இதுவரை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.படம் கொஞ்சம் ஸ்லோவாக நகர்ந்தாலும், கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டியது..

    சைக்கோ சிறந்த படங்களில் ஒன்று..இதையும் மிஸ் பண்ணாதிங்க.வணக்கம்.

    ReplyDelete
  5. அப்புறமா..ஹாலிவுட் ரசிகரே,,ஏதோ ஒரு வழியா வந்துட்டேன்ல..இனிமேல கேப் விடாது பதிவு போட டிரை பண்றேன்.அப்புறம் நம்ம நிரூபன் சாருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  6. பதிவு வரவர சுவாரஷ்யமாகிக் கொண்டே வருகிறது. வாழ்த்துக்கள் குமரன்!

    ReplyDelete
  7. << JZ said,, >>

    தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் எனது நன்றிகள்..நண்பர் சொன்னா கைரக்டுதான்..வணக்கம்,

    ReplyDelete
  8. ஹாலிவுட் ரசிகன் >> ஹாலிவுட்டில் - அறுபதுகளின் துவக்கத்தில் கருப்பு வெள்ளை கிட்டத்தட்ட முழுமையாகவே வழக்கொழிந்துவிட்டது.. ஆனாலும் தான் எடுக்கும் காட்சிகள் கறுப்புவெள்ளையில் தான் அழகாக இருக்கும் என்று வீம்பாக எடுத்தார் ஹிட்ச்காக்.. (பணப்பற்றாக்குறையினாலும் கூட என்று செய்திகள் உண்டு).. கலர்/ உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டு தொண்ணூறுகளின் இறுதில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு படு தோல்வி அடைந்தது..:-)

    ReplyDelete
  9. << பிரசன்னா கண்ணன் சைட் >>>

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மற்றும் இனிய வணக்கங்கள்..
    உண்மைதான் நண்பரே..பொதுவாக ஹிட்ச்காக் ரத்தம் என்றாலே பயந்து ஓடுபவர்.அதனால்தான் அவரது படங்களில் சஸ்பென்ஸ் கொலைகள் இருக்கும்.. ஆனால் ரத்தம் பெரும்பாலும் இருக்காது..எனவே இந்த படத்தின் ஸ்கிரிப்ட் படித்தவுடன் இது போன்ற காட்சிகள் வரவே கலரில் எடுத்தால் இன்னும் வயலண்டாக இருக்கும் என்பதற்காக கறுப்பு வெள்ளையில் எடுத்தாராம்..அதோடு பணமும் ஒரு பிரச்சனை..இது இண்டிபெண்டன்ஸ் திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது.
    இதே படத்தை 98 - ஆம் ஆண்டு கலரில் எடுத்தார்கள்..அப்படியே ஃப்ரேம் பை ஃப்ரேம் ரீமேக்காம்..படுத்தோல்வி அடந்ததோடு அனைவராலும் குத்திக்கிழிக்கப்பட்டதே உண்மை..ஹிட்ச்காக் ஹிட்ச்காக்தான்..

    ReplyDelete
  10. நிறைய பேர் இந்த படத்தை பற்றி சொல்ல கேட்டிருக்கிறேன். ஹாலிவுட்ரசிகன் சொன்னது போல் ப்ளாக் அன்ட் வைய்ட் காரணமாக பார்க்க ஒரு இன்ட்ரெஸ்ட் வரல. இனி பார்த்து விட வேண்டியது தான்.

    ReplyDelete
  11. @@ Lucky Limat லக்கி லிமட்..@@

    தங்களது இனிய வரவுக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி நண்பரே..
    படத்தை கண்டிப்பாக பாருங்கள்..உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்க வாய்ப்புகள் உண்டு.வணக்கம்.

    ReplyDelete
  12. படம் தொடர்பாக நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் . அருமையான விமர்சனம் சகோ . நன்றிகள் .

    ReplyDelete
    Replies
    1. @@ Mahan.Thamesh
      படம் தொடர்பாக நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் . அருமையான விமர்சனம் சகோ . நன்றிகள் @@

      தங்களது நல்வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் என் நன்றிகள்.
      வாய்ப்பு கிடைப்பின் படத்தை பாருங்கள்.வணக்கம்.

      Delete
  13. இனிய மாலை வணக்கம் நண்பா,

    நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் ஹிட்சாக்கின் மற்றுமோர் வடிவத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    நான் ஆங்கிலத் திரைப்படங்களில் கறுப்பு வெள்ளை படங்கள் பார்ப்பது அரிதிலும், அரிது.
    ஆனால் அந்தக் குறையினை தங்களின் விமர்சனமும், சைக்கோ திரைப்படமும் போக்கியிருக்கிறது.

    நேரங் கிடைக்கும் போது கண்டிப்பாக இந்தப் படத்தினைப் பார்க்கிறேன்.

    ரொம்ப நன்றி நண்பா.

    ReplyDelete
    Replies
    1. @@ நிரூபன் @@

      தங்களது சிறந்த வருகைக்கும் பின்னூட்ட பகிர்ந்தமைக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்,
      கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.பிடிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு நண்பரே.வணக்கம்.

      Delete
  14. மிகவும் அற்புதமான படம்........ ஹிட்சாக்கின் கிளாசிக்கல் படம்.
    போன வாரம் கூட மக்கள் டிவியில் தமிழில் போட்டார்கள்.....2-3 முறை பார்த்தல் கூட இந்த படத்தில் சுவாரிசியம் குறையாது....
    கதையை சொல்லாமல் மிகவும் சுவாரசியமாக எழுதி உள்ளீர்கள்..... :)

    ReplyDelete
    Replies
    1. @@ ராஜ் @@

      தங்களது சிறந்த வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் எனது நன்றிகள் நண்பரே,
      மக்கள் தொலைக்காட்சியில் நானும் இந்த படத்தை இன்னொரு முறை பார்த்தேன்.தமிழில் பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது.
      நீங்கள் சொன்னது போல இது ஹிட்ச்காக்கின் கிளாசிக்தான் என்பதில் சந்தேகம் இல்லை. முறைகள் பார்த்தால் கூட சலிப்பு தட்டாது.
      அப்புறம் நண்பரே, இன்னும் எந்த பதிவும் நீங்க போடலயே..சீக்கிரம் போடுங்க..நாங்க எல்லாம் ரொம்ப ஆவலா காத்திருக்கிறோம்.அந்த வெஸ்டர்ன் தொடர்ச்சிதானே ??
      வணக்கம்.

      Delete
    2. @Kumaran...
      நன்றி நண்பரே....பணிச்சுமை காரணமாக சிறிது காலம் பதிவு எதுவும் எழுத வில்லை.....வெஸ்டர்ன் சீரீஸ்ன் கடைசி பாகத்தை எழுதி வருகிறேன்....இன்றோ அல்லது நாளையோ போஸ்ட் செய்து விடுவேன்...
      உங்கள் அன்பு கலந்த அக்கரைக்கு மறுபடியும் என் நன்றிகள்......

      Delete
    3. @@ ராஜ் @@

      சைக்கை போடு போடுங்க நண்பரே..பதிவை படிக்க ஆவலோடு இருக்கிறேன்..பதிவு சிறப்பாகவே இருக்குமென்ற நம்பிக்கை எனக்கு உள்ளது..வணக்கம்.

      Delete
    4. நண்பா ... எனக்கு ஏதோ லிப்ஸ்டர் அவார்ட்ன்னு ஒன்னு கொடுத்தாங்க.அதை உங்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். உங்களுக்கு பிடித்த இன்னும் 5 புதிய பதிவர்களுக்கு இதைப் பகிரவும்.

      மேலதிக விபரங்களுக்கு - http://hollywoodrasigan.blogspot.com/2012/02/liebster-blog-award.html

      Delete
    5. @@ ஹாலிவுட்ரசிகன் @@

      அருமையான முயற்சி நண்பரே..என்னையும் இதில் இணைத்ததற்கு மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்..விரைவில் நானும் பதிவு போடுகிறேன்.

      Delete
  15. நல்லதொரு படத்தை பற்றிய நல்லதொரு பதிவு.


    சாவி
    யின் தமிழ் சினிமா உலகம்


    மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

    ReplyDelete
    Replies
    1. @@ சாவி @@

      தங்களது முதல் இனிய வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.தொடர்ந்து தங்களது ஆதரவுகளை எதிரிப்பார்க்கிறேன்.

      Delete
  16. மிக அருமையாக தெளிவாக இருக்கிறது விமர்சனம்.. படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்.. பொதுவாக எல்லா உலகசினிமாக்களும் என்னை கவர்வதில்லை.. அதிகம் காட்சிகளால் நகரும் கதையைக்கொண்ட படங்களே என்னை மிகவும் கவர்ந்தவை காரணம் அதிக உரையாடல் உள்ள படங்களை எனக்கு புரிந்து கொள்வது கடினம், படம் பார்த்தால் கதை புரிய வேண்டும் அப்போதுதான் பார்ப்பேன்..

    ReplyDelete
    Replies
    1. @@ Riyas @@
      இரவு வணக்கம்,
      தங்களது இனிய வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் எனது நன்றிகள் நண்பரே..தங்களது பிரச்சனை எனக்கும் உண்டு..ஆனால் இந்த படத்தில் அதுவெல்லாம் இல்லை.பார்வையாளர்களை எளிதில் கட்டிப்போடக்கூடிய படமிது.எல்லாரும் புரிந்துக்கொள்ளும் விதத்தில் எடுக்கப்பட்டதும் சைக்கோவின் தனிப்பட்ட சிறப்புதான்.
      வாய்ப்பு கிடைப்பின் பாருங்கள்..பிடிக்க கூடும்.நன்றி.

      Delete
  17. படத்தைப்பார்த்திட்டாப்போச்சு. உங்க பதிவின் எழுத்துக்களை Italic ஆ விடாமல் சாதாரணமாகவே விடுங்கள். அது வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. @@ KANA VARO @@
      இரவு வணக்கம்,
      தங்களது முதல் இனிய வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் எனது நன்றிகள்..
      கண்டிப்பாக இனிமேல் அதை தவிர்க்க முயல்கிறேன்..படத்தை பாருங்கள் தங்களை கவர்ந்திடக்கூடும் நன்றி.

      Delete
  18. அருமை. நானும் பார்த்திருக்கிறேன் இந்த படத்தை, அனால் உங்கள் விமரிசனம் படத்தை இன்னொரு முறை பார்க்க தூண்டுகிறது.
    சமீபத்தில் ரசித்த படம் - தாவணி கனவுகள்

    ReplyDelete
    Replies
    1. @@ லக்ஷ்மிராஜன் @@

      தங்களது முதல் சிறந்த வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள் சகோ..நேரம் கிடைப்பின் இன்னொரு முறை பார்த்துவிடுங்கள்..

      Delete
  19. sirantha pathivu.. niraya information collect seithu eluthu kireerkal.ungalodu chat seiya arvamai ullen..
    chat id kidaikuma?

    ReplyDelete
    Replies
    1. தங்களது இனிய வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள் நண்பரே..Email : thava11kumaran@gmail.com

      Delete
  20. குமரன்....ஹிட்ச்காக் படங்களின் வெற்றி இன்று வரையிலும் ஆய்வு நடந்து வருகிறது.
    சினிமா உலகத்திற்க்கு...அவரால் கிடைத்த தொழில் நுட்ப மேம்பாடுகள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. @@ உலக சினிமா ரசிகன் @@
      வணக்கம் அண்ணே..
      தங்களது இனிய வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் எனது நன்றிகள்..
      என்னை பொருத்தவரை ஹிட்ச்காக் ஒரு சினிமா கடல்..கடந்த ஒரு வருடத்தில் கிடைத்த அறிமுகத்தில் என்னால் முடிந்தவரை சில படங்களையே பார்த்து இருக்கிறேன்.எனது பார்வைகளையும் இங்கு பகிர வேண்டும் என்ற நோக்கமே இந்த பதிவுகள்.இவரை பற்றிய புத்தகங்கள், பதிவுகள் என்று இபொழுதுதான் படிக்க தொடங்கி இருக்கிறேன்..ஆதனால், கண்டிப்பாக ஒரு நாள் இவரால் சினிமாவுக்கு கிடைத்த தொழில்நுட்ப மேம்பாடுகள்.என்ற தலைப்பில் கண்டிப்பாக சில வார்த்தைகளாவது பகிர்வேன் என் நம்பிக்கையில்..மீண்டும் நன்றிகள்.தொடர்ந்து வாருங்கள், ஆதரவோடு ஆசிகள் முக்கியம்.

      Delete
  21. இந்தப் விமர்சனத்தை பார்க்கும் போது, அன்றைய கிளாச்சிக் படங்களை இன்றைய டெக்னாலஜி கொண்டு வென்றுவிட முடியாது என்றுத் தோன்றுகிறது .. இந்தப் படம் drew barrymore நடிப்பில் மறுபடியும் வந்தது அல்லவா??

    ReplyDelete
    Replies
    1. @@ Kalidasan J @@
      தங்களது நேரத்தை ஒதுக்கி எனது எழுத்துக்கும் ஆதரவு அளிக்கும் விதத்தில் இங்கு வருகை புரிந்ததோடு பின்னூட்ட பகிர்வுக்கும் எனது ,இதயம் சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன் சகோ.

      இன்றைய சில படங்களில் டெக்னோலோஜி என்பது வெறுமனே ஒரு அலங்கார பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து..ரசிகர்களையும் குறிப்பிட்ட வயதினர்களையும் கவரந்திட உதவும் ஓர் ஆயுதமாகவே உபயோகபடுத்தப்படுகிறது. அதனால்தான், எத்தனையோ ரீமேக் படங்கள் வந்த போதும் அதனது ஒரிஜினலை அசைக்க முடிவதில்லை என்று நினைக்கிறேன்..இது தவறா சரியா என்பது தெரியவில்லை..எனக்கு தோன்றியவற்றை சொல்கிறேன்..

      சுமாரான படங்களை கூட விட்டுவைக்காத ஹாலிவுட்க்காரர்கள் சைக்கோ போன்ற படங்களை விட்டுவைக்கவே மாட்டார்கள்..Psycho II (1983), Psycho III (1986), Psycho IV: The Beginning (TV 1990) போன்ற சீக்குவல்ஸ் எடுத்ததோடு Psycho (1998) என்று அதே பேரில் ரீமேக்கும் செய்துவிட்டார்கள்..சைக்கோவை பார்த்தவர்கள் கண்டிப்பாக மற்றவைகளை பார்க்க வேண்டும்..அப்பொழுதுதான் வித்தியாசங்களை உணர முடியும் என நம்புகிறேன்.

      நீங்கள் குறிப்பிட்ட நடிகை drew barrymore இதன் மறு ஆக்கத்தில் நடித்ததாக தெரியவில்லை..ஆனால், Julianne Moore என்பவர் (Psycho (1998)) நடித்திருந்தார்..

      மீண்டும் தங்களது வருகைக்கும் பல நன்றிகள்..தொடர்ந்து வாருங்கள்..தங்களை போன்றவர்களின் ஆதரவுகள் அவசியம் தேவை..சகோ.

      Delete
  22. சைக்கோ ஒரு சில பாகங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்..பிளாக் அன்ட் ஒயிட் பார்த்ததில்லை ஆனால் கேள்வி பட்டிருக்கிறேன்.....கதையை சொல்லாமல் விமர்சனம் செய்வதே நல்லது......சுவாஸ்ரயமான பதிவு....முடிந்தால் தி ஓமன் பற்றி எழுதுவீர்களா? நான் முதன் முதலாக பார்த்த ஆங்கில Black & White Movie ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. @@ வீடு K.S.சுரேஸ்குமார்.@@
      என் இனிய காலை வணக்கம்,
      தங்களது சிறந்த வருகைக்கு என் நன்றிகள் சகோ..இது கருப்பு வெள்ளை படமாகினும் காலத்தை கடந்து பலராலும் மதிக்கப்படும் படைப்பிது..இன்றைய ஹாரர் படங்களுக்கு தீவிர ரசிகர்களாக இருப்பவர்களுக்கு ஒரு வேளை பிடிக்காமல் போகலாம்..ஆனால், ஒரு முறையேனும் இப்படைத்தை பார்ப்பதே சிறந்தது..முழுமையாக பாருங்கள்.உங்களுக்கு பிடிக்க கூடும்.

      தங்களது விருப்பத்தை நிறை செய்யாமல் விடுவேணா ?? கண்டிப்பாக தெ ஓமன் படத்தை பற்றி எழுதுகிறேன்.எனக்கு பிடித்த ஹாரர் படங்களில் ஒன்று...விரைவில் அதை பதிவாக்க முயற்சிக்கிறேன்.

      மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்..தொடர்ந்து வாருங்கள்..சகோ.

      Delete
  23. நல்ல விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கு நன்றிங்க சார்..தங்களை போன்றவர்களின் வருகை என்னை மகிழ்விப்பதோடு ஊக்குவிக்கிறது..தொடர்ந்து வருகை அளியுங்கள்.

      Delete
  24. ரொம்ப நாளைக்கு முன்னாடி பாத்தது. உங்க பதிவு அந்தப்படத்தை மீண்டும் பாக்க தூண்டுது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்..
      தங்களது வருகையில் மனம் மகிழ்ந்தது..மறுபடியும் வாய்ப்பு கிடைப்பின் படம் பாருங்கள்..மிக்க நன்றி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...