என் எடுகேஷன் - சிறந்த திரைப்படம், நடிப்பு மற்றும் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட, 2009 ஆம் ஆண்டு Carey Mulligan, Peter Sarsgaard, Emma Thompson, Dominic Cooper, Olivia Williams மற்றும் பலரது நடிப்பில், Lone Scherfig இயக்கத்தில் வெளிவந்த கமிங்க் ஒப் ஏஜ் காதல் சித்திரமாகும்.
ஜென்னி மெல்லொர் அழகானவள், நல்ல அறிவுத்திறனும் கடின உழைப்பும் கொண்ட 16 வயது பள்ளி மாணவி.தன் தந்தையின் ஆசைகள் படி ஒக்ஸ்ஃபோர் பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டுமென்பதை லட்சியமாக, முழு நாட்டத்துடன் படித்துவருபவள்.பள்ளி முடிந்து ஒரு நாள், மழைநேர பொழுதில் டேவிட் கோல்ட்மன் என்பவரை தற்செயலாக சந்திக்க நேர்கிறது.டேவிட் - தவறான வழியில் பணத்தை ஈட்டுவதை பழக்கமாக கொண்டவன், ஏறக்குறைய ஜென்னியை விட இரண்டு மடங்கு அதிகமான வயதை கொண்ட யூத இனத்தை சேர்ந்தவன்..
தொடக்கத்தில் நட்பு என்ற முறையில் அறிமுகமாகும் உறவு வழக்கம் போல காதலை எட்டிப் பார்க்கிறது..போக போக ஜென்னி மற்றும் குடும்பத்தின் நம்பகத்தன்மைக்கு உட்பட்ட ஆளாகவும், ஜென்னியின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் காதலனாகவும், இக்கட்டான சந்தர்ப்பங்களில் துணைப்புரியும் நல்ல இதயம் கொண்ட மனிதனாகவும் காட்டிக்கொள்கிறான்.டேவிட்டுடனான உல்லாச உறவில் பரிட்சையில் தோல்வி அடைவதோடு படிப்பை உதறி தள்ளுகிறாள்..இதனை தொடர்ந்து.. ஜென்னியின் பெற்றோரும் டேவிட்டை திருமணம் புரிய சம்மதம் சொல்கின்றனர்.திருமண நாள்..அங்கு வெளிப்படும் உண்மைகளே மீத திரைக்காட்சிகள்.சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் படம், முடிந்தப்பின்னும் மனதோடு நல்ல உணர்வுகளை தரக்கூடியது.
பருவ வயது ஆசைகள் நிரம்பிய மனக்கட்டுப்பாட்டுகளை மீறிய முழுமையாக ஒருவரை பற்றி அறிந்துக்கொள்ளமால், அளவுக்கோளை தாண்டிய பாசமும் நம்பிக்கையும் கொண்ட பருவ வயது மாணவியாக

படத்தில் மையக் கதாபாத்திரமான ஜென்னியை திரைக்காட்சிகளின் உள்ளே அழைத்து செல்லும் டேவிட் கொல்டுமன் கதாபாத்திரத்தில் Peter Sarsgaard..அநேகமாக இவரது நடிப்பில் பார்க்கும் 4 அல்லது 5 ஆவது படமென்று நினைக்கிறேன்.என்றும் இல்லாத அளவில் இவரது நடிப்பு என்னை அதிகமாகவே பாதித்துவிட்டது.காட்சிகள் ஒன்றன் பின் நகரவே கொஞ்சம் எரிச்சலையும் மூட்டுகிறார்.பொதுவாக பீரியட் படங்களின் மீது அதிகமான பிரியம் கொண்டவன்..அதற்கு மிக முக்கியமான காரணம் இந்த வகை அமைப்பில் படங்களில் இடம்பெறும் அழகுதான்.அந்த வரிசையில்..இந்த படமும் ஒன்றாகிவிட்டது.
1960- ஆண்டுகளின் பழைய இங்கிலாந்தை கண் முன் வந்து நிறுத்துகிறது திரைப்படம்..பிரமாண்டமான, மிக பெரிய அளவில் கேமரா அசைவுகள், இயற்கை காட்சிகள் இல்லாவிட்டாலும் கதாபாத்திரங்களுடன் இணைந்தே ஒர் அழகான ஓவியமாக வலம் வருகிறது ஒளிப்பதிவு.இதனை சிறப்பான முறையில் கையாண்ட John de Borman கண்டிப்பாக பாராட்டதக்கவர்.தனது திரையுலகில் இன்னொரு சிறப்பான பணியை செய்திருக்கிறார். ப்ரான்ஸ் நாட்டில் இடம்பெரும் காட்சிகள் சில கணங்களே வந்தாலும் மனதிலே நிற்க்கின்றன.படத்தின் வெற்றிக்கு கலை இயக்குனர் Ben Smith-இன், (The Queen (2006) போன்ற படங்களில் பணிப்புரிந்தவர்) பங்கும் மிக அதிகம்.

தற்போதைய சூழலில் மலேசியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பள்ளி பருவ காதல் என்பது அதிகமாகவே வளர்ந்துக்கொண்டு வருகிறது.இதனை காதல் என்று சொல்வதை விட பதின்ம வயதில் வரும் ஒரு இன கவர்ச்சி என்று கூறலாம்.இப்படி ஒரு இளம் வயதில் "காதல் அது இது" என்று சாதாரண இன கவர்ச்சியின் பால் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையே முடிந்துவிட்டதாக எண்ணி வருந்தும் சகோதர சகோதரிகள் நிறையவே.இதே சூழலை 60 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் வசித்த ஒரு மாணவியின் கதையாக்கி இதனால் ஏற்படும் விளைவுகளையும், அதிலிருந்து மீண்டு வர வேண்டிய அவசியத்தையும், மேலோட்டமாகவும் தெளிவாகவும் அதே நேரம் மென்மையாகவும் தரமான ஒரு பிஜி - 13 ரேட்டிங் பெற்ற படைப்பாக வழங்கிய படக்குழுவினருக்கு பல நன்றிகள்.கண்டிப்பாக பதின்ம வயதை தொடுபவர்கள் மற்றும் தன் வாழ்க்கையின் அடுத்த படியில் காலடி எடுத்து வைக்கும் இளம் வயதினர்கள் பார்க்க வேண்டிய படம்.
Though the latter part of the film may not appeal to all, An Education is a charming coming-of-age tale powered by the strength of relative newcomer Carey Mulligan's standout performance. - Rotten Tomotoes "94%"
இங்கிலாந்து படமான இது, உலகளவில் நல்ல வரவேற்பு பெற்றதோடு 7.5 மில்லியன் பட்ஜெட்டில் உலகம் முழுவதும் சுமார் 26 மில்லியனுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடதக்கது..மேலும், பல திரைப்பட விழாக்களில் பல பரிந்துரைகளோடு நிறைய விருதுகளை வென்றது இன்னொரு சிறப்பு.மொத்ததில், இந்த படம் எனக்கு பிடித்த கவர்ந்த திரைப்படங்களில் ஒன்றாகிவிட்டது.சமீப காலத்தில் பார்த்து ரசித்து சிந்திக்க வைத்த ஒரு படம்..நடிகர்களின் நடிப்புக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம்.
என் எடுகேஷன் - அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வாழ்க்கை படம் + பாடம்/
==============================================================

மேற்ச்சொன்ன படங்களில் சென்ற வருட இடையில் பார்க்க கிடைத்த படம் Closely Watched Trains (1966)..கமிங் ஒஃப் ஏஜ் பிரிவில் வெளிவந்த செக் குடியரசு நாட்டில் எடுக்கபட்ட ஒரு மாஸ்டர்பீஸ் எனலாம்..இரயில் நிலையத்தில் புதிதாக வேலை கிடைத்து செல்லும் பதின்ம வயதான இளைஞன் பற்றியது..ஆஸ்கர் விருது பெற்ற படம்..பதிவாக எழுத நினைத்த படம்..சிறந்த உலக திரைப்படங்களை விரும்புவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பு.
==============================================================
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.உங்கள் ஆதரோவோடு,
No comments:
Post a Comment