சினிமா தொடங்கியதிலிருந்தே அறிவியல் புனை திரைப்படங்கள் வந்த வண்ணமே இருக்கிறது..எண்ணிலடங்கா கற்பனைகளாலும் பிரமாண்டமான திகைப்பூட்டும் காட்சியமைப்புகளாலும் மக்களை தங்களது வலைக்குள் சிக்கவைத்து வருகிறது..2001 ஒரு ஸ்பேஸ் ஒடிஸி தொடங்கி அவதார் போன்ற படைப்புகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.இது போன்ற திரைப்படங்களே இன்று உலகமெங்கும் வளர்ந்து வருகிற சினிமா தொழில்நுட்பத்திற்கு ஒரு மைல் கல்லாக விளங்குகிறது.டெர்மினட்டர், அவதார் போன்ற திரைப்படங்கள் இதையே திரும்ப திரும்ப நிருபித்துக்கொண்டும் வருகின்றன.
Logan's Run அல்லது லோகனின் ஓட்டம் 1976-ஆம் ஆண்டு மைக்கேல் ஆண்டர்சன் என்பவரின் இயக்கத்தில் மைக்கேல் யார்க், ஜென்னி மற்றும் ரிச்சர்ட் ஜோர்டான் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஹாலிவுட் அறிவியல் புனை திரைப்படமாகும்.வில்லியம் எஃப் நோலன் மற்றும் ஜார்ஜ் கிளேடன் ஜான்சன் என்ற எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் 1967 (அதே பெயரில்) வெளிவந்த நாவலை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டதோடு அதில் சிறந்த Visual Effects- காக வென்றது குறிப்பிடதக்கதாகும்.
சரியாக 2274 - ஆம் வருடம்.முப்பது வயதை நெருங்கும் அனைவருமே இறக்க வேண்டிய கட்டாயம் அல்லது நிலை ஏற்படுகிறது.மக்கள் அனைவரும் வெளியுலகமே என்னவென்று தெரியாத நிலையில் அனைவரும் தாங்கள் வசிக்கும் நகரத்தின் உள்ளே சீல் வைக்கபடுகின்றன்ர்.மேலும் அவர்கள் இன்பமான வாழ்க்கையை வாழ்வதற்கு அரசாங்கம் எல்லா வசதிகளையும் செய்து தருகிறது.
முப்பது வயதை நெருங்கும் அனைவரும் Carousel என்ற இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கட்டளை அல்லது சட்டத்தை விதிக்கிறது (ஏன்..எதற்கு என்ற கேள்விகளுக்கு திரையில் பதிலைக் காணுங்கள்).இதை மறுத்து நகரத்தை விட்டு தப்பித்து செல்வதற்கு முன்படும் அனைவரையும் "Sandmen" என்று அழைக்கபடும் போலிஸ் அதிகாரிகளை கொண்டு தீர்த்தும் கட்டிவிடுகிறது. இதற்கிடையே திரைப்படத்தின் கதாநாயகனான மைக்கேல் யார்க், அதாவது..."லோகன்" சில காரணங்களினால் நகரத்தை விட்டு ஓடக்கூடிய இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது.இவருடன் கதாநாயகியான ஜென்னி Agutter, அதாவது..."ஜெசிக்கா" இணைந்துக்கொள்ள, போலிஸும் பின்னால் துரத்த.இவர்கள் இருவரும் தப்பித்தார்களா அல்லது பிடிபட்டார்களா அல்லது வெளிநகரில் காத்திருக்கும் தெளிவான உண்மையென்ன என்பதை பதிவிரக்கமோ அல்லது டிவிடியோ ஏதாவது இருந்தால் கட்டாயம் பாருங்கள்.(கதை சொன்ன விதம்..தாங்க இப்படி மோ..மோ...மோ...ச..ச..மா இருக்கு.படத்த பாருங்க பிடிக்க வாய்ப்புண்டு)

இசையமைப்பாளரை பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும்.Chinatown-1974, Planet of the Apes-1968 போன்ற திரைப்படங்களின் இசையமைப்பாளரும் தெ ஒமன் என்ற ஹாரர் திரைப்படத்திற்க்காக ஆஸ்கர் விருது பெற்றவருமான Jerry Goldsmith, உலகளவில் எனக்கு மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர்களில் ஒருவர்.வழக்கம்போல் இவர் பின்னனி இசையில் சும்மா கலக்கி இருப்பார்.ஒரு வித்தியாசமான 70 ஆண்டு சைன்ஸ் ஃபிக்ஷன் படங்களையை பார்க்க நினைப்பவர்கள் இந்த லோகான்ஸ் ரன்னை பார்க்கலாம்..ஆக்சன், திரில்லர், ரொமான்ஸ் என்று அனைத்து வகையிலும் அமைந்த ஒரு பொழுது போக்கு அம்சம் இப்படம்.
உங்கள் ஆதரோவோடு,

No comments:
Post a Comment