Follow by Email

Friday, 7 August 2015

The Evening Star (1996) உறவுகள் தொடர்க்கதை..

இதுவரை நான் பார்த்த ஹாலிவுட் படங்களில் மனதோறமாய் தங்கிய, மறக்க முடியாத படங்களில் டெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மெண்ட் என்ற படத்தை சொல்லலாம்...மனித உறவுகள் முக்கியமாக தாய் மற்றும் மகளுக்கிடையிலான ஓர் அழகிய உறவை நினைவுகளாக தந்த படம்.பார்த்தது வெறும் ஒரு முறையே ஆனாலும் பல காட்சிகள் இன்றுவரை மனதிலே நிற்கின்றன.பல நாட்களுக்கு முன்னமே இந்த படத்தை பற்றி ஏற்கனவே சில வரிகளை பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.அந்த பதிவை படிக்காதவர்கள்..இங்கே சென்றுவிட்டு வரவும்..இந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமாக 1996-ஆம் ஆண்டு வெளியான தெ இவ்னிங் ஸ்டார் என்ற படத்தை சற்று நாட்களுக்கு முன்பு பார்க்க கிடைத்தது.அந்த அனுபவங்களே இன்றைய சிறு பார்வைகளாய்.

தெ இவ்னிங் ஸ்டார்: தெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மெண்ட் திரைப்படத்தின் தொடர்ச்சியாக சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் தொடங்கிறது. மகளுக்கும் தாயுக்கும் உள்ள உறவை மென்மையாக எடுத்துரைத்த முதல் பாகத்தின் இறுதியில் மகள் மரணத்தை தழுவ, இரண்டாம் பாகம் தன்னுடைய இறந்துப் போன மகளின் இரண்டு மகன்கள் மற்றும் மகளுக்கும் பாட்டிக்கும் இடையிலான உறவை பற்றி விவரிக்கின்றது.Robert Harling என்பவரின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் 1996-ஆம் வெளிவந்த படமிது..இதில் பிரபல நடிகை Shirley MacLaine, Aurora Greenway என்ற ஆஸ்கர் விருது பெற்றுக்கொடுத்த தன்னுடைய முந்தைய கதாபாத்திரத்திற்க்கு மீண்டும் உயிர்த்தர, இவருடைய மூன்று பேரப்பிள்ளைகளாக Juliette Lewis as Melanie Horton, Mackenzie Astin as Teddy Horton மற்றும் George Newbern as Tommy Horton ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மேலும், படத்தின் முக்கிய பாத்திரங்களில் Bill Paxton, Marion Ross, Ben Johnson மற்றும் பலர் படத்துக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளனர்.இதில், Rosie Dunlop என்ற ரொலில் சிறந்த நடிப்பை வெளிபடுத்திய Marion Ross, சிறந்த துணை நடிப்புக்காக கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும்.

நீண்ட வருடங்களுக்கு முன்பு, எதிர்ப்பாராத விதமாக உங்களது ஒரே மகள் மரணமடைய, பாட்டி என்ற பாச பிணைப்பில் அவரது குழந்தைகளை பத்திரமாக வளர்க்கிறீர்கள்..காலங்கள் ஓடஒருவர் வறுமை, சிறைச்சாலை என்று ஒவ்வொரு பிள்ளையும் வெவ்வேறான சூழ்நிலைகளில் பாதைகளில் செல்கிறார்கள்.உங்களுக்கோ இப்பொழுது வயதாகிவிட்டது..ஒரு பாட்டியாக உங்களது தவிப்புகள் என்ன? உணர்வுகள் என்ன? இது போன்ற நிறைய விஷயங்களை இத்திரைப்படம் பேசுகிறது.பாசம், சோகம், காதல், பரிவு, அக்கறை என்று பலதரபட்ட பாவங்களையும் நடிப்பையும் திரையில் வழங்கி மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்துள்ளார் Shirley MacLaine.முதல் பாகத்தில் எப்படி ஜேக் நிக்கல்சனோ, அதுப்போல இந்த பாகத்தில் Bill Paxton, அவுராவின் அண்டை வீட்டு மனநல மருத்துவராகவும் தன்னை விட வயதில் மிகவும் மூத்த அவுராவின் குறுகிய கால காதலானாகவும் வந்து நகைச்சுவையோடு கலந்த சுவாரஸ்யமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் Shirley MacLaine நடிக்கும்போது வயது ஏறக்குறைய 62 இருக்கும்.ஆனால் காதல் நடிப்பில் மட்டும்..ம்ம்..ம்ம்.கண்டிப்பாக ஷெர்லி மெக்லைனின் சிறந்த படங்களில் தெ இவ்னிங் ஸ்டார் இல்லையென்றாலும் மனதில் நிற்கும்படியான பேர்ஃபோமன்ஸை கொடுத்துள்ளார்.படத்தின் ஆனிவேறே இவரது நடிப்புதான்.படம் முடிந்த பிறகு இணையத்தில் தேடிய போது இந்த படத்துக்கு இவருக்கு பெரியளவில் எந்த விருதுகள் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றத்தை தந்தது.படத்தில் இன்னொரு சுவாரஸ்யம் ஜேக் நிக்கல்சன்தான்.டைட்டில் கார்டில் இவரது பெயர் வந்ததுமே இப்ப வருவாறு அப்புறம் வருவாறுன்னு  நம்பி, கடைசில கிளைமக்ஸ் முன்னாடி அதே பாத்திரத்தில் கொஞ்ச நிமிடங்கள் வந்தாலும் நிறைவான திருப்தியை தந்துவிட்டு போகிறார்.இவர் இதன் முந்தைய பாகத்துக்கு சிறந்த நடிப்பு - ஆஸ்கர் வென்றது குறிப்பிடதக்கது.இந்த படத்தையும் முதல் பாகத்தையும் இணைத்து பேசுவதோ ஒப்பிடுவதோ தவறு என்று நினைக்கிறேன்..முதல் பாகம் கொடுத்த அதே திருப்தியை கொடுக்க இந்த படம் தவறிவிட்டது என்பதே உண்மை..மற்றபடி டெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மென்ட் பார்த்தவர்கள் கண்டிப்பாக் பார்க்க வேண்டும்..

முதல் படத்தோடு பார்க்கும் பொழுது, இது விமர்சக மற்றும் வசூல் ரீதியிலும் பலமாக மொத்து வாங்கிய படமிது.ஆனால் படம் எனக்கு பிடித்திருந்தது.மொத்தத்தில் காதல், சோகம், சிரிப்பு பார்ப்பவர்களை மிக எளிதாக கவரக்கூடிய படமிது..அப்படி எடுக்கிறேன் இப்படி எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரிஜினல் படத்தின் பெயரை கெடுக்கும் படங்களோடு ஒப்பிடும்போது, இது எவ்வவோ பரவாயில்லை என்றே மனதில் தோன்றியது.அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சீக்குவெல்..தெ இவ்னிங் ஸ்டார்.

.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.உங்கள் ஆதரோவோடு,

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge