Follow by Email

Tuesday, 25 August 2015

Horror Of Dracula (1958)


சில மாதங்களுக்கு முன்பு பார்த்த திரைப்படமாகும்.தலைப்பிலேயே ஹாரர், டிராக்குலா என பயமுறுத்திய பழைய இங்கிலாந்து சினிமா.படம் அந்த இரண்டிலும் சுமார்தான் எனினும், ஓய்வு நேரத்தை செலவழிக்க கொஞ்சம் ஏகுவான படைப்பு.
பொதுவாக நான் டிராகுலா திரைப்படங்களை விரும்பி பார்ப்பது இல்லை.அதற்கான காரணத்தையும் நான் அறிந்ததில்லை.நான் இதுவரை பார்த்த டிராகுலா திரைப்படங்கள் இரண்டுதான்.ஒன்று 2004-ஆம் ஆண்டு வெளிவந்த VAN HELSING, இன்னும் ஒன்று இந்த ஹாரர் ஒஃப் டிராகுலா.சிறிய வயதில் சில டிராகுலா கதைகளையும் தகவல்களையும் விரும்பி படித்ததாக ஒரு ஞாபகம்.உலகில் அதுவும் இருளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மிகவும் சுவாரஸ்யமான விடயங்களில் டிராகுலாவும் ஒன்றென அறிந்துக்கொண்ட காலம் அது.படித்த கட்டுரைகள், தகவல்கள் இன்றுவரை என் புத்தக அலமாரியில் இருக்கிறது.அதை சில நாட்கள் மறந்த நிலையில், மீண்டும் பைலை திறக்க தூண்டியது இத்திரைப்படம்.

 ஹாரர் ஒஃப் டிராகுலா, 1958 - ஆம் ஆண்டு பேய் திகில்ப்பட இங்கிலாந்து திரைப்பட இயக்குனரான டெரன்ஸ் ஃபிஷர் இயக்கத்தில் வெளிவந்தது.வெளிவந்த நேரம் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள ரசிகர்களாலும் விமர்சனர்களாலும் சிறந்த டிராகுலா திரைப்படங்களில் ஒன்றாக இன்றுவரை கருதப்படுவது குறிப்பிடதக்கதாகும்.இதில், முக்கிய நடிகர்களாக Peter Cushing, Christopher Lee and Michael Gough ஆகியோர் நடித்துள்ளனர்.இசையை ஜேம்ஸ் பெர்னார்ட் என்பவர் கவனிக்க, படத்துக்கு கூடுதல் சிறப்பான ஒளிப்பதிவில் ஜேக் ஆஷர் என்பவர் பணியாற்றியுள்ளார்.

தன்னுடைய நண்பனான ஜோனாதன் ஹார்க்கர் மர்மமான முறையில் இறந்தைத் தொடர்ந்து, இவருடைய மரணத்திற்கு டிராகுலா காரணமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார் டாக்டர் வேன் ஹெல்சிங்.கடைசியாக தன் நண்பன் அனுப்பிய கடித்தத்தின் வாயிலாக கடைசியாக தங்கிய மாளிகைக்கு வருகிறார்.வந்தவுடனே தன் நண்பனின் உடல் ஒரு பிணப் பெட்டியில் காண நேரிட, அதனைத் தொடர்ந்து டிராகுலாவை கொல்ல வேண்டிய வேட்டையில் இறங்குகிறார்.அடுத்தடுத்து சில மரணங்களும் நிகழ, இதற்கான காரணங்கள் என்ன ? டிராகுலாவை கொன்றாரா ? அல்லது அந்த முயற்சியில் தோல்வியடைந்தாரா ? என்பதை டிவிடி கிடைக்குமா என்று தெரியவில்லை...இல்லையென்றால் பதிவிறக்கம் செய்து பாருங்கள்...

மேற்ச்சொன்னது முடிந்தவரையில் சுருக்கமாக எழுத நினைத்த கதை..சில சிறப்பம்சங்களை விட்டுவிட்டுதான் முன்வைத்துள்ளேன்.இந்த படம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.கல்ட் கிளாசிக் என்று பலர் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்

பொதுவாக டிராகுலா படங்களை பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாது.ஏனா பார்த்ததே ரெண்டுதான்.முன்பு சொன்னது போல, VAN HELSING திரைப்படம் பிரமாண்டத்தில் மாட்டிக்கொண்ட நிலையில், ஹாரர் ஒஃப் டிராகுலாவில் பிராமாண்டம் எல்லாம் இல்லீங்க.வெறுமனே கதையை வைத்துக்கொண்டு சிறிய பெட்ஜெத்தில் காட்சிகளை நேர்த்தியாகவே நகர்த்தியுள்ளனர்திரைக்கதையின் பலமும் அதிலேயே உள்ளது.

பழைய திரைப்படங்களில் முக்கியமாக என்ன இருக்கிறதோ இல்லையோ பின்னனி இசைக்கு மட்டும் பஞ்சமே இருக்காது.பல திறம்வாய்ந்த இசை ஆளுமைகள் இந்தியா மற்றும் அயல் நாடுகளில் உதித்த பொற்க்காலம் அது.அதிலும் திகில் திரைப்படங்களுக்கு சொல்லவே தேவையில்லைசைக்கோ, தெ ஒமென் போன்ற திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.அந்த திரைப்படங்களின் பின்னனி இசை இன்னும் என் மனதிலே இருக்கிறது.அதே வரிசையில் ஜேம்ஸ் பெர்னார்ட், இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவருக்கு மகனாக பிறந்த இங்கிலாந்தியர்.Seven Days to Noon (1950) என்ற படத்துக்காக ஆஸ்கர் வென்றவர்.இதிலும், பின்னி எடுக்கிறார்.திரைப்படத்தில் டிராகுலாவாக வரும் Christopher Lee பற்றி சொல்லியே ஆகனும்..அப்படியே டிராகுல மாதிரியே இருக்காரு..நல்ல நடிப்பு.    

இறுதியாக, ஹாரர் ஒஃப் டிராக்குலா - காட்சிகளில் வேகத்தை கம்மிப்படுத்திக்கொண்ட படம்வன்முறை காட்சிகளுக்காகவே அந்த டைமில் X ரேட்டிங்க் பெற்ற படம்.அதுவும் ஜப்பானிய வெர்ஷனில் இன்னும் அதிகமாக கொடூரங்கள் நிறைந்த படைப்பாம்.(யார் கண்டா ??) நீங்கள் பழைய படங்களை விரும்பி பார்ப்பவர் எனின், ஒரு முறை காணலாம்.ரசிக்கலாமா ? என்று கேட்டால் கட்டாயம் இல்லை.உலகளவில் இன்று ரசிகர்கள், விமர்சகர்களை கொள்ளைக்கொண்ட இப்படம், நான் இதுவரை கண்ட மர்மப்படங்களில் கொஞ்சம் கடைசி ரேங்கையே பிடித்துள்ளது.எதுக்கும் நீங்கள் பாருங்கள்...   

இயக்குனர் டெரன்ஸ் ஃபிஷர்

20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஹாரர் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஃபிஷர், 1904-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 திகதி பிறந்தவர் ஆவார்.பிரிட்டிஷ் நடிகர்களான பீட்டர் கஷ்ஷிங் மற்றும் கிறிஸ்டோபர் லீ போன்றவர்களை முன்னணி நட்சத்திரங்களாக கொண்டு இவர் இயக்கிய திரைப்படங்களான டிராகுலா (1958), ஹவுன்ட் ஆப் த பாஸ்கர்வில்லாஸ் (1959) மற்றும் மம்மி (1959) போன்றவை இன்றுவரை  கிளாசிக் திகில் திரைப்படங்களாக விளங்குவது மட்டுமன்றி ஃபிஷரின் சிறந்த படைப்புகளாக கருதப்டுகின்றன.தொடர்ந்து டிராகுலாவை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்களால் உலகலவில் சினிமா ரசிகர்களை கவர்ந்த இவர், ஜூன் 18 திகதி 1980 - ஆண்டு  தனது 76 வயதில் காலமானார்.

மீண்டும் அடுத்த பார்வையில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.உங்கள் ஆதரோவோடு,

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge