Follow by Email

Saturday, 1 August 2015

Sea Of Love (1989), Peeping Tom (1960) 18++ சினிமா டைரி

எத்தனையோ படங்கள் பார்ப்போம்..அதை பற்றிய சிறு சினிமா டைரிதான் இத்தொடர்
Sea Of Love - 1989
அல் பசினோவின் இன்னொரு அற்புதமான நடிப்பில் ஹரோல்ட் பெக்கர் இயக்கத்தில் 1989- ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கிரைம் திரில்லர்.Sea Of Love என்ற ஒரு பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டு தொடர்ந்து ஆண்களை கொலை செய்யும் சீரியல் கொலைகாரன் பற்றிய திரைப்படம். கொலையாளியை கண்டுபிடிக்க வரும் போலிஸ் அதிகாரியாக அல் பசினோ.அவருக்கு ஜோடியாக Ellen Barkin நடித்திருக்கிறார். தொடர்ச்சியாக நடைப்பெறும் கொலைகளை கண்டுபிடிக்க வரும் போலிஸ், அவரோடு காதல் பாடும் ஹீரோயின் மற்றும் கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் திரில்லர் கடைசியில் ஒரு டிவிஸ்ட் என்று வழக்கமான ஹாலிவுட் பாணியில் திரைக்கதை அமைந்திருந்தாலும் பார்ப்பவர்களுக்கு போரடிக்காத வகையில் காட்சிகளை நகர்த்தியுள்ளது இயக்குனரின் திறமை.

அதற்கு மிக பெரிய பலமாக அல் பசினோவின் Det. Frank Keller கதாபாத்திரம்.இவ்வளவு அருமையா மனுஷன் இத்தன காலமா எப்படிதான் நடிக்கிறாரோ என்று படம் முடியும் போது எனக்கு தோன்றியது.Revolution (1985) திரைப்படத்திற்கு பிறகு சுமார் நான்கு ஆண்டுகள் கழிந்து நடித்த படம்.கூடவே கோல்டன் குலோப் பரிந்துரையும் பெற்றுவிட்டார் (எத்தன பரிந்துர... 1..4..7..10...12 யெப்பா..இன்னும் இருக்கு).உலக நாயகன் கமல் ஹாசனிடம் இவருடைய ஸ்டைல் கொஞ்சம்..கொஞ்சம் இருப்பதை அவ்வப்போது உணர்ந்திருக்கிறேன் (பெரியவங்க மன்னிக்கவும்..இது ஒருவேள என்னோட கற்பனையாக கூட இருக்கலாம்).எல்லா காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார் அல் பசினோ..

வழக்கமான ஹாலிவுட் திரைப்படமாக இருந்தாலும் விமர்சக, வசூல் ரீதியில் நல்ல வரவேற்ப்பையே பெற்றுள்ளது.அனைத்து கிரைம் திரில்லர் விரும்பிகள் (கூடவே ரொமேன்ஸும்) தாராளமா பார்க்கலாம்.

Peeping Tom - 1960
நீள்ப்பதிவாக எழுத வேண்டிய திரைப்படம்.நேரம் கிடைக்காததால் ஒரு சிறிய பார்வை...
இங்கிலாந்தில் 1960-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய திரைப்பட ஜாம்பவனான மைக்கேல் போவெல் திரை இயக்கத்தில் வந்த இன்னொரு கிரைம் சீரியல் கில்லர் திரைப்படம்..உலகளவில் ரசிகர்களாலும் விமர்சனர்களாலும் இன்று பிரிட்டிஷ் சினிமாவில் மைல் கல்லாக விளங்குகிறது. இன்னும் கொஞ்சம் லேலே சென்று பிரிட்டிஷ் சினிமாவின் சைக்கோ என்றுக்கூட பலரால் அழைக்கபடுகிறது.Carl Boehm மற்றும் Moira Shearer திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க Leo Marks அவர்களின் திரைக்கதையில் வெளிவந்ததது.திரைப்படத்தின் முதல் காட்சியே கொலையோடு ஆரம்பிக்கிறது. ஹிட்சாக்கின் திரைப்படங்களை போல கொலைகாரனை முதலில் அறிமுகம் செய்து அடையாளம்  காட்டிவிடுகின்றனர்.இவர் ஒரு சைக்கோ கில்லர்.எங்கே இவருடன் எந்த பெண் பேசினாலும் அவரையும் கொன்று விடுவாரோ என்ற எண்ணத்தை முதல் காட்சியிலிருந்தே கிளப்பிவுட்ட இயக்குனருக்கு நன்றி.பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவில் திரைக்காட்சி ஒவ்வொன்றையும் இவ்வளவு திறமையாக கையாண்ட திரைக்கதை ஆசிரியர் பாராட்டத்தக்கவர்.

ஒட்டு மொத்தமாக இயக்குனரான மைக்கேல் போவெலின் திரை வாழ்க்கையை மாற்றி போட்ட திரைப்படம்.Controversial-லாக ஆரம்பத்தில் விளங்கி இருந்தாலும் இன்று கல்ட் கிலாசிக்காக பரவலாக கருதப்படுகிறது.

=======================================
உங்கள் ஆதரவுடன்  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge