Follow by Email

Monday, 3 August 2015

Yojimbo (1961) பாகம் ஒன்று..


 அகிரா குரோசாவா என்ற திரை இயக்குனரை பற்றி அரியாத சினிமா ரசிகர்கள் குறைவுஜப்பானில் பிறந்து ஆசிய சினிமாவை பிற தேசங்களுக்கு அள்ளி சென்ற உலகின் தலைச்சிறந்த படைப்பாளி.இவரை பற்றி எழுதாத சினிமா பதிவர்களை பார்ப்பது அரிது.காரணம், இவரது பெயரை முதன் முதலாக அறிந்துக்கொண்டதே தமிழ்ப்பதிவர்களின் மத்தியில்தான்.அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த உலக கலைஞர்கள், ரசிகர்கள் என அனைவராலும் மதிக்கப்படுபவர்.இவரது இயக்கத்தில் நான் முதன் முதலாக தரிசித்த திரைக்காவியம் டிரீம்ஸ்.சில கனவுகளின் தொடர் ஓவியங்களாக திரையையே அலங்காரம் செய்திருப்பார் அகிரா.
அந்த படத்தை தொடர்ந்து பார்த்த படம்தான் யோஜிம்போ...இந்த படத்தை பார்ப்பதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது செர்ஜியோ லியோனியின் எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃப் டோலர்ஸ் என்ற வெஸ்டர் படம்தான்.அதிகாரப்பூர்வ அனுமதியின்றி யோஜிம்போவின் தழுவலாக 1964ஆண்டு வெளிவந்த இத்தாலிய திரைப்படம். இணையத்தில் இப்படத்தை பற்றி சில தகவல்கள் சேமிக்கையில் கிடைத்த அற்புதமான தகவல்தான் யோஜிம்போ.அதுவும் இயக்குனர் யாரென்று பார்க்கையில் பெயரில் அகிரா குரோசாவா..
யோஜிம்போ "ஒரே இடத்தில் தங்காது சுற்றி திரியும் சாஞ்சுரோ என்ற சாமுராய், ஊர் மக்களை வாடி வதக்கி மனதாலும் உடலாலும் துன்புறுத்தி அவர்களை அடிமைகளாய் வைத்திருக்கும் இரண்டு எதிரி கும்பலுக்கு இடையில் பாடிகார்ட் (பாதுக்காவளராக) வேலைக்கு சேர்ந்து (பாசாங்கு செய்து), தன்னுடைய புத்திக்கூர்மையின் வழி எப்படி இவர்களை அழிக்கிறார் என்பதே மூல கதை..19 ஆம் நூற்றாண்டு ஜப்பான்தான் கதைக்களம். இப்படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல இழைத்தாலும் ஒரு தொடரே போட கூடிய பல சிறப்புகளும் சுவார்ஸ்யங்களும் படம் முழுக்க கொட்டிக்கிடக்கின்றன.யோஜிம்போ 1961-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்டு அகிரா குரோசாவா இயக்கிய, ஆக்சன், சாகசங்கள் என்று பல சிறந்த அம்சங்களை கொண்டு வெளிவந்த சாமுராய் படமாகும்.Toshiro Mifune என்பவர் சாஞ்சூரோ என்ற சாமுராயாக நடிக்க, இவருடன் Eijiro Tono and Tatsuya Nakadai போன்றவர்கள் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.சிறந்த உடை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்த படத்தின் கதை, திரைக்கதையை அகிராவோடு இணைந்து Ryuzo Kikushima என்பவர் எழுதி இருக்கிறார்.
இன்றுவரை பல திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் ஒரு சிறந்த உதாரணமாக விளங்கும் படமாக இதை குறிப்பிடலாம். அடுக்கடுக்காக பல முக்கியமான காட்சிகளை தன்னில் கொண்டு பார்வையாளர்களை தன்னுடைய வசம் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.காட்சிகள் ஒவ்வொன்றையும் எடுத்துள்ளனர் என்று சொல்வதைவிட செதுக்கி இருக்கின்றனர்.அதற்கு சான்றாக பல சிறப்பான அசங்களை கூறலாம்.நடிகர் Toshiro Mifuneசென்ற நூற்றாண்டின் இணையற்ற ஜப்பானிய நடிகராக கருதப்படும் தாஷீரோ, இந்த படத்தில் ஸ்டைலிஷான முகபார்வைகள், வீரமான நடை, அதன் வீரியம் குறையாத வால் சண்டை என்று பலதரப்பட்ட அம்சங்களை தத்ரூபமாக நடிப்பில் அசத்துகிறார்.அதான் நடிப்பு..அதுதான் அளவு என்பதுப்போல ஒவ்வொரு ஃப்ரேம்களிலும் இவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷங்கள் இருக்கே..அத்தனையும் கண்ணால் பார்த்து ரசிக்கக்கூடியை.அநேகமாக 50, 60 ஆம் ஆண்டுகளில் நிறைய ஹாலிவுட் நடிகர்களுக்கு நடிப்பளவில் பெரிய இன்ஸ்பிரஷனாக இருந்திருப்பார் என்று மனதுக்கு தோன்றியது.படம் தொடங்கியதுடன் டைட்டில் கார்டுலேயே இவருக்கு பின்னால் பயணிக்கும் கேமரா படம் முடியும் வரை இவரது அசைவுகளை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.முதல் சீனில் ஒரு குச்சியை தூக்கிப்போட்டு அது ஒரு பக்கம் விழ அதன் பாதையில் செல்வது, வில்லன் கும்பலிடையே தெனாவட்டாக நடந்து செல்வது, அதே வில்லங்களிடமிருந்து செமத்தையாக அடிவாங்கும் போது கொடுக்குற முக அசைவுகள் என்று பல காட்சிகளில் முத்திரைப் பதிக்கிறார்.
Toshiro Mifune என்ற உலக தர நடிகரை பற்றி, அகிரா என்ற உலக மேதை சொன்னவை“Mifune had a kind of talent I had never encountered before in the Japanese film world. It was, above all, the speed with which he expressed himself that was astounding. The ordinary Japanese actor might need ten feet of film to get across an impression; Mifune needed only three. The speed of his movements was such that he said in a single action what took ordinary actors three separate movements to express. He put forth everything directly and boldly, and his sense of timing was the keenest I had ever seen in a Japanese actor. And yet with all his quickness, he also had surprisingly fine sensibilities.”

இயக்குனர் அகிரா குரோசாவா: டிரீம்ஸ் படத்தை முதன் முதலாக பார்த்த போது சற்று போரடித்ததே முற்றிலும் உண்மை..இரண்டு மணி நேரங்கள் ஓடும் திரைப்படம் கனவுகளோடு உறவாடுகிறது..அதுவரை டெர்மினேடர், ஜுராசிக் பார்க் என்று விறு விறுப்பின் உச்சத்தில் நகர்ரும் படங்களை பார்த்து வந்த எனக்கு இந்த படத்தில் வித்தியாசமான 8 கனவுகளும், வாழ்க்கையின் போக்கிலேயே ஊர்ந்துச்சென்றதுதான் சோர்வை கொடுத்தற்கு முதல் காரணம் என்று நம்புகிறேன்..எப்படியோ சலித்துக்கொண்டு பார்த்து முடித்த போது ஒரு விதமான உணர்வு அல்லது திருப்தி மனதோரம் துளிர்விட்டதே உண்மை.அதனால், இந்த யோஜிம்போ படத்தை எதற்கும் தயார் நிலையிலேயே பார்க்க தொடங்கினேன்..என்ன ஆச்சரியம்.அவ்வளவு நேர்த்தியான அதைவிட முக்கியம், வேகமான திரைக்காட்சிகள்.. சாகசங்கள், புத்துணர்ச்சியை வழங்கும் வசனங்கள் என்று அத்தனையும் படத்தோடு ஒன்றிவிட வழிசெய்தது.
தூரத்தில் உள்ள மலைத்தொடரை காட்டி யோஜிம்போ என்று டைட்டில் கார்ட் போட, குச்சியை மேலே வீசி விழும் திசையில் சாமுராய் பயணிக்கும் காட்சிகள், அதாவது படத்தின் கதையே ஒரு குச்சியில் தொடங்குவதுப்போல் இருக்கும்.ஊருக்குள் நுழைந்ததும் ஒரு தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உரையாடலை கவனிக்க நேர்கிறது.."வாழ்க்கை பூராவும் சட்டிப்பானையில் கஞ்சி குடித்து வாழமுடியாது" எனும் மகனையும், தந்தையின் தவிப்பையும், என்னதான் நடக்கிறது இந்த ஊரில் என்று இதன் வழி படத்தின் கதைக்கு நம்மை அனைவரையும் தயார்ப்படுத்துகிறார் இயக்குனர்.அடுத்த காட்சியில், ஒரு நாய் மனிதனின் கையை கவ்விக்கொண்டு வருவதாக அமைத்து இந்த ஊரில் நடக்கும் வன்முறையை மிகவும் இயயல்பாக சித்தரிக்கிறார் இயக்குனர். அத்தனையும் சிறப்பு.பார்த்து அனுபவிக்க வேண்டியவை.இப்போதைய நிறைய படங்கள் ஹீரோவையும் அவரது சாகசங்களை மனதில் கொண்டே எடுக்கப்பட்டு வருகின்றன..அதை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்டமான சண்டை காட்சிகள், கொடூரமான வில்லன் அவரை வெற்றிக்கொள்வதற்கு கதாநாயகன் மேற்க்கொள்ளும் செயல்களை இன்றைய தமிழ், ஹிந்தி, ஆங்கில படங்களிலும் வழிந்தோடுகின்றனஇப்பொழுதெல்லாம் வில்லன்கள் அனைவரும் மிகவும் திறமைசாலிகளாக சித்தரிக்கபடுவதே ஒரு விதத்தில் ஹீரோவின் புத்திக்கூர்மையையும் அவரை இன்னும் சாகசங்கள் நிறைந்தவராக காட்டுவதற்காகவே என்றே நினைக்கிறேன்.இந்த அம்சங்கள் அத்தனையும் அகிரா என்ற உலக மேதையால் 50 வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது.

(தொடரும்
அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.உங்கள் ஆதரோவோடு,

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge