செர்ஜியோ லியோனி இயக்கிய டோலர்ஸ் டிரைலோஜியின் முதல் பாகமாக தயாரிக்கப்பட்டு 1964-
ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம்,
அமெரிக்க இளம் நடிகரான கிளிண்ட் ஈஸ்ட்வூட்டின் நடிப்பாற்றலுக்கும்,
என்னியோ மொரிக்கன் என்ற இசை ஆளுமைக்கும் மிகப் பெரிய தொடக்கமாக அமைந்ததோடு உலக பிரசித்தி பெறச் செய்தது எனலாம்..
அதுவரை துணை இயக்குனராகவும் கதை,
திரைக்கதை ஆசிரியராகவும் 1961-
ஆம் ஆண்டு Il Colosso di Rodi
என்ற ஒரே படத்தை இயக்கிருப்பினும்,
லியோனிக்கு சர்வதேச அளவில் மிக பெரிய பெயரையும் சினிமா வசதிகள் பெருமளவில் இல்லாத சமயத்தில் பல ரசிகர்கள் முக்கியமாக ஹாலிவுட்டின் பார்வைகள் தன் பக்கம் திரும்ப காரணமாகவும் அமைந்தது.
நிலையாக ஓரிடம் தங்காது அதிகம் பேசுவைதவிட கையால் எதிரிகளை கவனிக்கும் பெயரில்லாத துப்பாக்கி வல்லவன், ஊரில் வாழும் மக்களை துன்புறுத்தி வதைக்கும் Baxters மற்றும் Rojo இரண்டு எதிரி கும்பல்களின் நம்பிக்கைக்கு ஆளாகி அவர்களையே வீழ்த்த முயற்சிக்கும் போராட்டங்களை பதிவு செய்யும் படமிது.எளிமையான கதை, சுவாரஸ்யங்கள் நிறைந்த திரைக்கதை என்று பார்வையாளர்களை எளிதில் கட்டிப்போடக்கூடிய விதத்தில் எடுக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
கதை, காட்சிகள் என்று யோஜிம்போவின் சாயலை பல இடங்களில் இத்திரைப்படம் கொண்டிந்தாலும், திறமைமிக்க இயக்கம், நடிகர்களின் தனிப்பட்ட நடிப்பு, கேமரா கோணங்கள் மிக முக்கியமாக மொரிக்கோனின் இசை ஆகியவற்றின் துணையோடு தனக்கே உரிய இடத்தில் இத்திரைப்படம் நிற்கிறது.செர்ஜியோ லியோனியின் ஆஸ்தான இசையமைப்பாளரான என்னியோ மொரிக்கொன், உருவாக்கிய விசில் ஒலிகள், கோரஸ் குரல்களை யாரால் மறக்க முடியும்..?? அதுவும் அத்தனையும் ரிதமிக்கான டீம்கள்.சோகங்கள் நிறைந்த மனதை தாளம் போட வைக்கும் ரகத்தில் இருப்பவை..
No comments:
Post a Comment