Saturday, 1 August 2015

Children Of The Corn (1984) - Soylent Green (1973) 18++ சினிமா டைரி (5)

Children Of The Corn (1984)
80களில் வெளிவந்த ஹாரர் பட ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தை அறிந்திருக்க பெரிய வாய்ப்புகள் உண்டு..ஏன் அப்புடி சொல்ற ? அப்ப இது என்ன அவ்வளவு அப்பாட்டேக்கர் படமானு நீங்க கேட்டிங்கனா நேக்கு பதில் எல்லாம் தெரியாதுங்க..சிறந்த படமானு பார்த்த எனக்கே தெரியாத நிலையில் ஹாரர் சினிமா வரிசையில் ரொம்பவும் ஃபேமஸான படமாக இதை கூறலாம்.காரணம் இந்த படத்தை தொடர்ந்து இதன் தொடர்ச்சியாக 6,7 படங்களும் வந்தாகிவிட்டது.கதையை பொருத்தவரை நமக்கு நன்கு பரிச்சயமான ஸ்டீபன் கிங் அவர்களின் சிறுக்கதைதான்..மனுஷன் பல காலமா ஹாரர் பிரிவில் தொடாத சமச்சாரங்களே இல்லை..அவ்வளவு பெரிய வல்லவர்.படத்தின் முதல் காட்சிதான் நாடியே..அந்த சிறுவனின் வாய்சில் தொடங்கும் கதை..சிறுவர்களின் கொடூரத்தை விளக்குகிறது.குழந்தையும் தெய்வமும் ஒன்றென படித்திருப்போம்..இங்கு சின்னப் பிள்ளைகளின் ரூபத்தில்தான் மரணமே..18 வயசுக்கு மேல இருப்பவர்களை கொன்னே தீரவேண்டும் என்ற எண்ணத்தோட பெத்த அம்மா அப்பாவையும் போட்டு தள்ளுர கூட்டமா அவங்க மாறுறாங்க.Malachai என்ற பையன்-தான் அக்கூட்டத்துக்கே தலைவன்.இப்படியே மூன்று வருஷங்கள் கடக்குது.அப்ப வராங்க பாரு நம்ம ஹீரோ, ஹீரோயின்..பர்ட் மற்றும் விக்கி.வேலை மாற்றத்தின் காரணமா கிளம்புகிறார்கள்..எப்படியோ அந்த கொடூரர்கள் இருக்கும் டவுனையும் அடைகிறார்கள்.இங்கு தொடங்கும் காட்சிகளே படத்தின் பலம்.அங்கு அவர்கள் என்ன ஆனார்கள் ? இதுக்கெல்லாம் என்ன காரணம் ஆகியவற்றை அறிய சினிமா பாருங்க எல்லோரும்.Peter Horton மற்றும் நம்ம ஜேம்ஸ் கேமரனின் எக்ஸ் வைஃப் Linda Hamilton ஆகியோர்தான் முக்கிய நடிகர்கள்.வசூல் ரீதியில் சிறந்த இடத்தை பிடித்த படம் பல சறுக்குகளால் விமர்சன அளவில் நல்ல புகழை தரத்தை தக்க வைத்துக்கொள்ள தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.நல்ல படமென்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு முறை கட்டாயம் பார்க்க வேண்டிய ஐட்டம்தான் இந்த ஹாரர் படம். 

Soylent Green (1973)
நீண்ட நாட்களாக வெய்ட்டிங் லிஸ்ட்டில் இருந்து பார்த்த சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படம். Charlton Heston, Edward G. Robinson போன்றவர்கள் நடிப்பில் Richard Fleischer என்பவர் டைரக்ஷனில்  1973ம் ஆண்டு வெளிவந்தது.2020 ஆம் ஆண்டு 40 கோடி மக்களை கொண்ட நியூ நகரம்தான் கதையின் களம்.இயற்கை வளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலை:வசிப்பதுக்குக்கூட இடமில்லாம்ல் சரிவர உணவுகளும் இல்லாமல் தவிக்கும் மக்கள் தொகை..Soylent Corporation என்ற உணவு தயாரிக்கும் நிறுவனத்தை நம்பிதான் குடி மக்களின் வாழ்க்கை.இங்கு நிகழும் ஒரு பெரிய மனிதனின் மரணம்..அதை விசாரிக்க வரும் போலிஸ் ஹீரோ..அதில் வெளிவரும் ரகசியங்கள்..இதுதான் என்னால் ரொம்பவும் சுருக்க முடிந்த கதை.70ல் வெளிவந்த அதுவும் எதிர்க்காலத்தை பேஸ் பண்ணிய சைன்ஸ் ஃபிக்சன் படம்.கொஞ்சம் கவர்ச்சி, சண்டை, கிரைம், காதல், ரகசியங்கள் என்று ஜேம்ஸ் பாண்ட் மசாலாக்களை கலந்துக் எடுக்கப்பட்டதுதான் சொய்லெண்ட் கிரீன்


==============================================

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...