Saturday 1 August 2015

The Bucket's List (2007) - Die Hard (1988) சினிமா டைரி 4

The Bucket's List (2007) - United States
A Film By Bob Reiner
Staring : Jack Nicholson, Morgan Freeman

2007ஆம் ஆண்டு Bob Reiner என்ற பிரபல அமெரிக்க இயக்குனரின் கைவண்ணத்தில், சினிமா உலகின் இணையற்ற நடிகர்களான ஜேக் நிக்கல்சன் மற்றும் மோர்கன் பிரீமனும் இணைந்து நடித்த காமெடி, டிராமா வகை படமாகும். பொதுவாக, இவ்விரண்டு நடிகர்களில் ஒருவர் நடித்தாலே மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு டபல் விருந்து எனலாம்.எது உள்ளதோ இல்லையோ கண்டிப்பாக நடிப்புக்கு பஞ்சமே இல்லாத விதத்தில் இருவரும் போட்டிப்போட்டு அசத்தியுள்ளனர்.படத்தில் மரணத்தை எதிர்நோக்கும் வயதான இரு புற்றுநோயாளிகளாக வந்து வாழ்ந்தே இருப்பார்கள்.

வாழ்க்கை என்பது சிலருக்கு புளித்து போகலாம்..ஏண்டா வாழுகிறோம் என்ற எண்ணமும் இதய கதவை தட்டலாம்..தோல்விகள் நிறைந்ததே முழுமையான வாழ்க்கை..வாழ்பவர்கள் பலருக்கும் வாழ்க்கையின் அருமையும் மகத்துவமும் தெரியுமோ இல்லையோ, ஆனால் மரணத்தின் கண்ணாடியில் உடைந்து விழ தேதி பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக தெரியும்..இன்னும் சில நொடிகள் உடையும் திகதிகள் தள்ளி போகாதா என்ற ஏக்கம் அவர்களின் நெஞ்சை உளுக்கும்.

மருத்துவமனை உரிமையாளரான எட்வர்ட் கோலும் மெக்கானிக்கான கார்டர் சேம்பர்ஸும் மரணத்தை நோக்கி வரும் புற்று நோயாளிகள். இருவரும் எதர்ச்சையாக ஹாஸ்பிதலில் சந்தித்துக்கொள்ள நண்பர்களாகின்றனர்.வாழ்க்கை முடியும் தருவாயில், தங்களது வாழ்நாள் ஆசைகளை  லிஸ்டாக போட்டு, அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்ற உலகம் முழுவது வலம் வருகிறார்கள்.அந்த சிறப்பான அனுபவங்களே அழகான கேமராவின் கண்களில் திரைப்பார்வைகளாக விரிகிறது.  

படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு நபர் படத்தின் இயக்குனரான போப் ரையினர்.இவர் எடுத்த "Misery" திரைப்படம் பலருக்கு பிரசித்தம். என்னவோ ஏதோ இவரைப் போன்ற சில இயக்குனர்களுக்கு பல நேரங்களில் பேரும் புகளும் ஏன் விருதுகளும் கூடக் கிட்டுவதில்லை.பல நல்ல இயக்குனர்களுக்கு விருதுகள் கிடைக்காதது (ஆஸ்கர்,கோல்டன் குளோப் என்று பல) வழக்கம்தான் என்றாலும் சில நேரங்களில் ஏமாற்றம்தான்.

சிறுவர்கள் வயதானவர்கள் என்று பாராமல் சிறந்த நடிப்புக்காகவும் பல அர்த்தமுள்ளக் கருத்துகளுக்காகவும் பார்க்க வேண்டிய பிஜி-13 படமிது..இறுதி காட்சிகள் மனதை ஈரமாக்க கூடியவை..சில மென்மையான உணர்வுகள் கூடவே சொந்தம் கொண்டாடுபவையாக அமைந்துவிடும்.

Die Hard (1988) - United States A Film By John Mactiernen
இந்த ஹாலிவுட் அதிரடி திரைப்படத்திற்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.புரூஸ் வில்லிஸ் நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளிந்து மிகச் சிறந்த வரவேற்ப்பைப் பெற்றதோடு வசூலையும் வாரி குவித்த தரமான ஆக்க்ஷன் திரில்லராகும்.படத்தின் இயக்குனரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நமக்கு எல்லோருக்கும் அறிமுகமான Predator (1987) படத்தை எடுத்த John Mactiernen ஆகும். சமீபகாலமாக இவரிடமிருந்து படங்கள் வராவிட்டாலும், சற்றாண்டுகளுக்கு முன்பு சென்றால் இவர் இயக்கிய Nomad, The Last Action Hero (1993) போன்ற நல்ல திரில்லர் படங்கள் கிடைக்கும்.டை ஹார்ட்டை பற்றி கூறவேண்டும் என்றால் முதலிலும் மிக முக்கியமானவர் படத்தின் ஹீரோவான புரூஸ் வில்ஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்றும் போலிஸ் அதிகாரியாக John McClane என்ற கதாபாத்திரத்தில் இவர் தோன்ற திரையே அதிரடியில் கலங்குகிறது. புகழ்பெற்ற ஹீரோக்களான அர்னால்ட் மற்றும் சிலிவெஸ்டர் ஸ்டால்லேன் போன்றவர்களுக்கு முறையே டெர்மினட்டர், ரேம்போ சீரீஸ் மாதிரி இவருக்கு டை ஹார்ட்.இதுவரை நான்கு படங்கள் வெளிவந்துள்ளன (நான் பார்த்தது முதல் ரெண்டு பாகம்தான்).

பல ஹாலிவுட் படங்களுக்கு ஒரு பாதிப்பாகவும் இன்ஸ்பிரேஷன் ஆகவும் இப்பொழுதும் விளங்கும் இப்படம், ஹாலிவுட் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியதாகும்.


==========================================

உங்க ஆதரவோடு 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...