Follow by Email

Saturday, 1 August 2015

ஜூலியாவின் நிலையும், ஈரானில் திருட்டும்

Something To Talk About (1995) - US
A Film By Lasse Hallström
Starring : Julia Roberts, Dennis Quaid and Robert Duvall

அமெரிக்க சினிமா மட்டுமன்றி உலகளவில் எனக்கு பிடித்தமான நடிகைகளைப் பட்டியலிடச் சொன்னால்....பத்துக்கூட தேறுமா என்பது சந்தேகம்தான்.என்னமோ ஏனோ ? உலகளவில் (சினிமாவை பொருத்தவரை) இயக்குனர்கள் என்னை கவர்ந்தவரையில் நடிகர்களோ அல்லது நடிகைகளோ கவருவதில்லை (நான் என்ன ஜென்மமோ போங்க..).அப்படி அந்த பத்து லிஸ்டை போட்டால், ஜூலியா ராபர்ட்ஸுக்கு ஒரு இடம் கண்டிப்பாக உண்டு...Pretty Woman (1990) படம் பார்த்த போது இவர் மீது வந்த பைத்தியம் இன்னமும் தலையை ஆட்டி படைக்கிறது. இவரது விளையாட்டுதனமான நடிப்பும் அப்பாவித்தனமான விழிகளுக்கும், சிறந்த நடிப்புக்கும் உலகளவில் ரசிகர்கள் பலர்.இதுவே இவரை சிறந்த நடிகைகளில் ஒருவராக உருவாக்கியுள்ளது.சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை 2001-ஆம் ஆண்டு எரின் ப்ராக்கோவிஸ் என்ற திரைப்படத்திற்காக வென்றதோடு, அதே ஆண்டில் சிறந்த நடிப்புக்கான கோல்டன் குளோப், ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் 'கில்ட் விருது மற்றும் பாஃப்தா போன்ற விருதுகளை வெற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது திரைப்படங்களின் வரிசையில் பார்த்த படம்தான் SOMETHING TO TALK ABOUT.தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கிறான் என்று அறிந்துக்கொள்ளும் மனைவி, அதனை எப்படி ஏற்றுக்கொள்கிறாள் : அவளது REACTION என்ன என்பதே திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.தமிழ் திரைப்படங்களில் உள்ள மனைவிகளை போல கணவனின் கள்ள தொடர்பு தெரிந்ததும் பிறந்த வீட்டிற்கு வந்து விடுகிறார் ராபர்ட்ஸ்.கதை மொத்தமும் அவருக்கும் அவரது கணவருக்கும் உள்ள விரிசலையே திரைக்கதை பேசுகிறது.

1995 ஆம் ஆண்டு Lasse Hallström என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் Dennis Quaid and Robert Duvall ஆகியோர் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.குடும்பத் திரைப்படம்தான் என்றாலும் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க கூடிய படம் என்று சொல்லிவிட முடியாது.அதற்கு பெரியளவில் காரணம் திரைப்படத்தின் வசனங்களே.மற்றபடி நேரம் இருப்பின் பார்க்கலாம்.
=============================================================================
In this type of cinema, whether working with actors or non-actors, as much as you do direct them, if you allow yourself to be directed by them, then the end result will be much more pleasing. The real and individual strengths of the actors is allowed to be expressed and is something that does affect the audience very deeply. - Abbas Kiarostami
=============================================================================
Close-Up (1990) - Iran 
ஈரானிய சினிமாவின் அறிமுகத்தில் கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று.சிறந்த இயக்குனர்களில் ஒருவரான Abbas Kiarostami.இவர் இயக்கிய திரைப்படங்களுக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு உண்டு...இவ்வளவு சிறிய சினிமாவில் இருந்துக்கொண்டு, கெடுபிடியான சென்சாருக்கு நடுவில் இவ்வளவு பெரிய வளர்ச்சியும் சாதனையும் சாத்தியமா ? என்று, பலமுறை எனக்குள் நானே கேட்டுக்கொண்டது உண்டு.இவரைப்போல சினிமா கலைஞர்களைப் பார்க்கும் போது எப்பொழுதும் என் மனதுக்குள் ஏதோ ஒரு மூலையில் தன்னம்பிக்கை பிறப்பதை அடிக்கடி உணர்ந்திருக்கிறேன்.சினிமா மட்டுமன்றி எந்த துறையிலும் நாம் முயன்றால் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை இது கொடுக்கிறது.இந்த உலகத்தர கலைஞனின் படைப்புகளில் நான் பார்த்த முதல் திரைப்படம் இந்த Close-Up..90-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த மிகச் சிறந்த படமாக கருதப்படுகிறது...இயக்குனரை மேலும் உலக அரங்கில் தலை நிமிரச் செய்தப்படம்.இந்த திரைப்படத்தின் மூலம் நான் அறிந்துக்கொண்ட இன்னொரு சிறந்த இயக்குனர் Mohsen Makhmalbaf.கண்டஹார் (2001) என்ற திரைப்படத்திற்க்காக கேன்ஸ் விருதுக்கு பரிந்துரை செய்யபட்டவர்.இவருடைய பேரை தவறாக பயன்படுத்தி, Ali Sabzian என்பவர் ஒரு குடும்பத்தை ஏமாற்றிய கதையையே இத்திரைப்படம் சித்தறிக்கிறது...திரைப்படம் மெல்ல சென்றாலும் கட்டாயமாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.  

உங்க ஆதரவோடு 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge